Posts

May Be - May Be Not !!!

Image
The intention in writing this blog post is to just remind each one of our consciousness, because we are not wrong, we are just direction less, we are carried away by few emotions, but it is very much important to stay grounded since we have to ensure our culture, economy and growth...because we are what we are ....!!!! Off late most of the posts in Face book and shares in Whats app have changed into a biased perception of few individuals. Please be rest assured a post in Face book or a share in Whats app to establish our love towards language is not enough if we love it we should be able to read it, write it without mistake, and talk fluently...if we trust that we are interested in the society and we are patriotic then not only post in Face book but also react, respond with responsibility to the society we live, Am not against any one's post and share, am only against Only posting and sharing without understanding or realizing the facts..if you come across a post

பட்டாம்பூச்சி விற்பவன் எங்கே? வாடுது பட்டாம்பூச்சிகள் இங்கே ?!

Image
சினிமா என்னும் அரிய ஊடகத்தின் மேல் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். சினிமா என்றால் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களை மட்டுமன்றி தொழில்நுட்ப ரீதியிலும் சினிமாவை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தவன். அதுவும் திரை இசை பாடல்கள், உங்கள் எல்லாரையும் போலவே என்னுள் பல ஏகாந்த அதிர்வுகளை உண்டாக்கியது என்பது உண்மையே!!!.  எம் எஸ் வி, கே வி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், வி குமார், ரகுமான், தேவா, சிற்பி,வித்யாசாகர், ராஜ்குமார், யுவன்  என மிக நீளமான பட்டியல்...குறிப்பாக எந்த ஒரு பாட்டிலும் அதன் வரிகளை கவனிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு அதற்கு நான் வளர்ந்த சூழலும் ஓர் காரணம். பாரதி, பாரதிதாசன், ராமையா தாஸ், மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, கவி கா. மு. ஷெரிஃப், கவியரசர் கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,காவிய க்க விஞர் வாலி,புலமைப்பித்தன்,மூ. மேத்தா, முத்துலிங்கம், அறிவுமதி , பிறைசூடன், வைரமுத்து, பழனிபாரதி, விஜய், கமல், சினேகன்,  என இதுவும் ஒரு நீண்ட பட்டியல்....ஒவ்வொரு பாடல்களிலும் வரும் உவமைகள், வார்த்தை வடிவங்கள், இசைக்காக

குருஸ்ரீ - தந்தையர் தினக்கவிதை !!!

Image
ஆறு வருடங்களுக்கு  முன் என் அப்பாவின் பிறந்த நாளுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கையை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை தன் ஒவ்வொரு அசைவுகளிலு ம் செயல்களிலும் எனக்கு புரிய வைத்ததை எழுதி இருந்தேன், இன்றளவும் ...என்றென்றும் அவை உண்மை என்பதால் இந்த தந்தையர் தினத்திற்காக அக்கவிதையை பதிவிடுகிறேன் .... அன்புள்ள அப்பாவுக்கு உன்னால் நான் ரசித்தவர்கள் சில இதோ....., பௌர்ணமி நிலா, கார்த்திகை குளிர், மார்கழி பனி, மலையருவி குளியல், மலராத ரோஜா, மல்லிகை வாசம், கொட்டும் மழை, ரயில் பயணம், அதிகாலை வானம், சூடான தேனீர், சுவையான உணவு, ஓயாத அலை, ஓவிய சிலை, சாய்ந்தாடும் மயில், சங்கீத குயில், சிரிக்கின்ற குழந்தை, சிவப்பான வானம், தூரத்து மேகம், கற்பூர வாசம், காகித கப்பல், மெல்லிய தென்றல், புல்வெளி பாதை, பூப்போன்ற சாதம், அம்மாவின் ரசம், பூவையர் விழிகள், மரத்தடி நிழல், மயக்கும் மாலை, பாரதி பாட்டு, கம்பன் காவியம், கவியரசர் கவிதை, சுஜாதா கதை, சுட்டாலும் வெயில், சுத்தமான நெய், எப்போதும் நான் !!! என்றாலே நீ !!!......................... .............................குருஸ்ரீ  THE GREATEST GIFT I HAVE EVER HA

மதிப்பிற்குரிய மழையே !!!

Image
மதிப்பிற்குரிய மழையே !!! வணக்கம், நலம் நலமறிய ஆவல் !!! நாங்கள் நலமில்லாததை அறிவதில் உனக்கென்ன ஆவல் ?!?! நீரின்றி அமையாது உலகு !!! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாடி வைத்தவர் பாடி வைத்தது !!! முழுவதும் நீரானாலும் அமையாது உலகு !!! முதலில் இதை நீ உணர் ??!! சீராக்க வேண்டிய நீர் !!! இன்று பாழாக்கலாமா ?!?! பயிர்களை வீணாக்கலாமா ?!?! வாடிய பயிர் வாடாமல் வரத்தானே வேண்டினார் வடலூரார் அன்று, வடிய வழியின்றி வாட்டி வதைக்கிறாய் என்றல்லவா!!????!! அழுகிறார் கடலூரார் இன்று ?!?! மண்ணில் யாவும் செழிப்பாக  - பெய்தால் இயற்கை  -  இறை-கை !!! கண்ணில் கண்ணீர் பெருக்காக பெய்தால் இயற்கை  - வழுக்கை ?!?! நீர் !!! மண்ணில் உயிர்கள் வாழ ஆதாரம் !!! இன்றோ உன்னால் எவ்வளவு சேதாரம் ??? உலகை காக்கும் நீர் !!! - இது முன்னோர் நெறி !!! அத்தகைய நீருக்கு வரலாமா கொலைவெறி ?!?! இன்றுவரை மழை இயற்கையின் சந்தோஷம் !!! இன்றோ!?!?! இங்கீதம் தெரியாத சங்கீதம் ??? போதும் அளவோடு நிப்பாட்டு !!! இதுவே என் பாட்டு ?!?! - குருஸ்ரீ 

கலைஞர் - குருவின் எண்ணம், குருஸ்ரீயின் கை வண்ணம் !!!

Image
நினைவுகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்  - குருவின் எண்ணம் குருஸ்ரீயின் கை வண்ணம் !!! புஞ்சையும் நஞ்சையும் பொய்யாகாத தஞ்சை மண்ணில்  மொழியும் உணர்வும் பின்னி பிணைந்த காலம் தன்னில்,  ஊரெல்லாம் ஒன்று கூடி, தெருவெல்லாம் கோஷம் பாடி, கடல் அலை தோற்கும் வகையில் கூட்டமோ கூடி நிற்க,  கரகர குரலில் கனல் தமிழ் பொங்கி வர, சிறுவன் நான் சிலிர்த்திடவே !!!  உருமிடும் சிங்கம் போல, உடன்பிறப்பே என்ற ஒரு வார்த்தை கேட்டவுடன்  உணர்ச்சி  பெருக்கிலன்றோ சிரக்கம்பம் செய்தார் தொண்டர் !!??!! நேர்வகுடு கொண்ட தலையோ, நேரிசையாய் நம்மை சேர்க்கும், வளர் பிறைபோல் நெற்றி, நிறையசையை நம்மில் ஈர்க்கும், கண்ணாடி உள்ளே விழிகள், சிலேடையில் வண்ணம் சேர்க்கும்  கையிலே சுழன்டிருக்கும் துண்டிலே, எதுகை மோனை இணைந்திருக்கும்  உள்ளத்து மொழியை மெல்ல உதட்டிலே  கோர்த்து,  வெள்ளத்து நீரைப்போல சரளமாய் சந்தம் வார்த்து, எண்ணத்தில் என்றும் இனமான உணர்வை சேர்த்து, வையத்தில் இன்றுவரை தமிழரின் மானம் காத்து, வெண்ணிற ஆடை உள்ளே மந்திர சொல்லால் அன்று, தன்னிகரில்லா தமிழால் தரணி

COMMON SENSE IS NOT COMMON...?!?!

Image
On a hectic month which had lot of discussions, meetings, excel sheets etc words from one of our senior collegue made me think a lot suddenly in a philosophical manner?!?!  he made us look at the issue in a different perception...he completed his statement saying " Common sense is not common"  It made me think on some common issues where we are concerned on common sense?!?! Irritating horn on a jam packed traffic  Highly noisy sounds of mobile, iPod etc in public transport, Someone laughing on a sad moment or in a death place Annoyingly pessimistic person whom we often have to encounter in everyday life People who comment awkwardly without even understanding the content  Normally our reaction or response to the above situation is to simply say a common word ...dont they have Common sense?? now then What is Common Sense?  If we google it, Wikipedia shows "Common sense is a basic ability to perceive, understand, and judge things which is shared by (

சலாம் "கலாம்" !!!

Image
வல்லரசு இந்தியா இனி உருவா கலாம்  -இதை  ஒவ்வொரு மனதிலும் உரமாக் கலாம் !!! அறிவியல் அறிவினை நாம் வளர்க் கலாம் -  அதனால்  வருங்காலம் நமக்கு புகழ் சேர்க் கலாம்  !!! நேர்மையும் உண்மையும் நெறியாக் கலாம்  - அவர்  போற்றிய கனவை நாம் நன வாக் கலாம் !!! மாமேதையின் ஆசைக்கு வலு சேர்க் கலாம்  - இதுவே  நம்மை உலக சபைதனில் உயர்வாக் கலாம் !!! உழைப்பை உணர்வை ஒன்றாக் கலாம்  - நிம்மதியாய்  உறங்கட்டும் நம் அன்பிற்கினிய - " கலாம்" !!! கண்ணீர் அஞ்சலி சலாம் "கலாம்" !!! - குருஸ்ரீ