சலாம் "கலாம்" !!!

வல்லரசு இந்தியா இனி உருவா கலாம் -இதை ஒவ்வொரு மனதிலும் உரமாக் கலாம் !!! அறிவியல் அறிவினை நாம் வளர்க் கலாம் - அதனால் வருங்காலம் நமக்கு புகழ் சேர்க் கலாம் !!! நேர்மையும் உண்மையும் நெறியாக் கலாம் - அவர் போற்றிய கனவை நாம் நன வாக் கலாம் !!! மாமேதையின் ஆசைக்கு வலு சேர்க் கலாம் - இதுவே நம்மை உலக சபைதனில் உயர்வாக் கலாம் !!! உழைப்பை உணர்வை ஒன்றாக் கலாம் - நிம்மதியாய் உறங்கட்டும் நம் அன்பிற்கினிய - " கலாம்" !!! கண்ணீர் அஞ்சலி சலாம் "கலாம்" !!! - குருஸ்ரீ