மதிப்பிற்குரிய மழையே !!!

மதிப்பிற்குரிய மழையே !!! வணக்கம், நலம் நலமறிய ஆவல் !!! நாங்கள் நலமில்லாததை அறிவதில் உனக்கென்ன ஆவல் ?!?! நீரின்றி அமையாது உலகு !!! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாடி வைத்தவர் பாடி வைத்தது !!! முழுவதும் நீரானாலும் அமையாது உலகு !!! முதலில் இதை நீ உணர் ??!! சீராக்க வேண்டிய நீர் !!! இன்று பாழாக்கலாமா ?!?! பயிர்களை வீணாக்கலாமா ?!?! வாடிய பயிர் வாடாமல் வரத்தானே வேண்டினார் வடலூரார் அன்று, வடிய வழியின்றி வாட்டி வதைக்கிறாய் என்றல்லவா!!????!! அழுகிறார் கடலூரார் இன்று ?!?! மண்ணில் யாவும் செழிப்பாக - பெய்தால் இயற்கை - இறை-கை !!! கண்ணில் கண்ணீர் பெருக்காக பெய்தால் இயற்கை - வழுக்கை ?!?! நீர் !!! மண்ணில் உயிர்கள் வாழ ஆதாரம் !!! இன்றோ உன்னால் எவ்வளவு சேதாரம் ??? உலகை காக்கும் நீர் !!! - இது முன்னோர் நெறி !!! அத்தகைய நீருக்கு வரலாமா கொலைவெறி ?!?! இன்றுவரை மழை இயற்கையின் சந்தோஷம் !!! இன்றோ!?!?! இங்கீதம் தெரியாத சங்கீதம் ??? போதும் அளவோடு நிப்பாட்டு !!! இதுவே என் பாட்டு ?!?! - குருஸ்ரீ