பட்டாம்பூச்சி விற்பவன் எங்கே? வாடுது பட்டாம்பூச்சிகள் இங்கே ?!

சினிமா என்னும் அரிய ஊடகத்தின் மேல் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். சினிமா என்றால் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களை மட்டுமன்றி தொழில்நுட்ப ரீதியிலும் சினிமாவை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தவன். அதுவும் திரை இசை பாடல்கள், உங்கள் எல்லாரையும் போலவே என்னுள் பல ஏகாந்த அதிர்வுகளை உண்டாக்கியது என்பது உண்மையே!!!. எம் எஸ் வி, கே வி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், வி குமார், ரகுமான், தேவா, சிற்பி,வித்யாசாகர், ராஜ்குமார், யுவன் என மிக நீளமான பட்டியல்...குறிப்பாக எந்த ஒரு பாட்டிலும் அதன் வரிகளை கவனிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு அதற்கு நான் வளர்ந்த சூழலும் ஓர் காரணம். பாரதி, பாரதிதாசன், ராமையா தாஸ், மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, கவி கா. மு. ஷெரிஃப், கவியரசர் கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,காவிய க்க விஞர் வாலி,புலமைப்பித்தன்,மூ. மேத்தா, முத்துலிங்கம், அறிவுமதி , பிறைசூடன், வைரமுத்து, பழனிபாரதி, விஜய், கமல், சினேகன், என இதுவும் ஒரு நீண்ட பட்டியல்....ஒவ்வொரு பாடல்களிலும்...