வாலி மீண்டும் வா நீ !!!

தமிழ் மொழி மீளா துயரில் வீழ்ந்தது இன்று, எதுகையும் மோனையும் இறந்தது கண்டு, நீ திருவரங்கம் விட்டு திரையரங்கம் வந்தவன் Kaaviya Kavingar Vaali எந்த தமிழரங்கிலும் தனியரங்கம் அமைப்பவன் கற்பனை தமிழும் விற்பனை தமிழும் தமிழன் மொழிந்தது உன்னால் கோடம்பாக்கம் நின்றது உந்தன் பின்னால் . நீ இயற்றிய பாடல்களை திருவாய் மலர்ந்தது ராமாவரம் அப்பாடல்கள் தானே பாமரர் மனதில் பெற்றது இறவாவரம் அவ்வழியே ராமாவரம் தொடங்கியது ராயபேட்டை வென்றது சென்ட் ஜார்ஜ் கோட்டை, அவர் தொண்டர்கள் தாங்கி நின்றது உந்தன் பாட்டை !!! இருளில் கிடந்த தமிழிசைக்கு புது உயிர் கொடுத்தவர் மெல்லிசை மாமன்னன் விசு ...நீர்அதற்கு வரிகளை வார்த்தெடுத்த காமதேனு பசு!! அதனால்தானே எங்கள் கவியரசர் விரும்பினார் தன நீள்துயிலை கவிபாட தகுந்தவன் நீ என்று பண்ணைபுரத்தை விட்டு வந்த இசைமேனி உந்தன் வசமாகி, உன்னோடு இணைந்தது, தமிழனின் இசை தரணி எங்கும் மலர்ந்தது இசைஞானியின் புகழை வானும் மண்ணும் வியந்தது !!! இசையால் வசியம் செய்யும் கலையை பெற்றான் மதராசின் அசல் முசல்மான், உன் வரிகள் தான் அவன்...