வாலி மீண்டும் வா நீ !!!

தமிழ் மொழி மீளா துயரில் வீழ்ந்தது இன்று,
எதுகையும் மோனையும் இறந்தது கண்டு,

நீ 
திருவரங்கம் விட்டு திரையரங்கம் வந்தவன்
Kaaviya Kavingar Vaali
எந்த தமிழரங்கிலும் தனியரங்கம் அமைப்பவன்
கற்பனை தமிழும் விற்பனை தமிழும் தமிழன் மொழிந்தது உன்னால் கோடம்பாக்கம் நின்றது உந்தன் பின்னால்

.
நீ இயற்றிய பாடல்களை திருவாய் மலர்ந்தது   ராமாவரம்
அப்பாடல்கள் தானே பாமரர் மனதில் பெற்றது இறவாவரம்
அவ்வழியே ராமாவரம் தொடங்கியது  ராயபேட்டை
வென்றது சென்ட் ஜார்ஜ் கோட்டை, அவர்
தொண்டர்கள் தாங்கி நின்றது உந்தன் பாட்டை !!!

இருளில் கிடந்த தமிழிசைக்கு புது உயிர் கொடுத்தவர்
மெல்லிசை மாமன்னன் விசு ...நீர்அதற்கு
வரிகளை வார்த்தெடுத்த காமதேனு பசு!!

அதனால்தானே எங்கள் கவியரசர் விரும்பினார்
தன நீள்துயிலை கவிபாட தகுந்தவன் நீ என்று

பண்ணைபுரத்தை விட்டு வந்த இசைமேனி
உந்தன் வசமாகி, உன்னோடு இணைந்தது,
தமிழனின் இசை தரணி  எங்கும் மலர்ந்தது
இசைஞானியின் புகழை வானும் மண்ணும் வியந்தது !!!


இசையால் வசியம் செய்யும் கலையை
பெற்றான் மதராசின் அசல் முசல்மான்,
உன் வரிகள் தான் அவன் இசையை நிதர்சனமாய் தாங்கி நின்ற ஹனுமான்!!மீண்டும் காப்பியமாய் உருவானது கலியுகத்தில் ஒரு ரகுமான்,
ஆம் உன்மொழியில்  சொன்னால் ரகுமான் என்றாலே காப்பியம் தானே!!

உன்னால் ஊக்குவிற்க நினைத்த பலர் தேக்கு விற்கிறார்கள்

பிறரை வாழ்துவதில்தான் நீ வாழ்ந்தாய்
வளரும் கவி பிள்ளைகளுக்கெல்லாம்  நீ ஒரு ஆண் தாய் !!!
நீ நன்றி மறவாதவன் அதனால் 
என்றும் இரவாதவன் - இறந்தும் இறவாதவன் ..

யார் ரசிக்கமால் இருப்பார் உந்தன் TIMING SENSE!!
அதனால்தானே கலைஞர் விரும்புவார் எந்த மேடையிலும் YOUR PRESENCE!!

 நீ, ஜிப்பா அணிந்து வந்த கலீல் ஜிப்ரான்
உன் பக்தி பாட்டினால் ஆன்மீக உள்ளங்கள் குளிரும்
பகுத்தறிவு பாடினால் கர ஒலிகேட்டே அறிவாலய அரங்கம் அதிரும்!!

நீங்கள் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த GOLD SMUGGLER!!
உம்மை அதிகம் ஈர்த்தது OLD SMUGGLER!!

தாம்பூலம் தரித்து வந்த உமர் கய்யாம் நீ
உன்னால்தான் தமிழில் உருவானது "நெஞ்சபுகழ்ச்சி அணி", இதுவரை விடுப்பில் சென்றது  வஞ்சபுகழ்ச்சி அணி??!!

காலமெல்லாம் தமிழ் கவி பாடியவனின் உயிரை கவர்ந்து சென்றான் எமன்,
இதை தடுக்க இயலாமல் தவிக்கிறாள் தமிழன்னை என்னும் WOMAN


இனி தமிழ் பாடல்களில் இருக்குமோ அழகிய நடை?!
காக்க தவறிய முருகா உனக்கு எதற்கு  ஆறுபடை ?!


காவிய கவிஞரே காலமெல்லாம் உன்னை நினைத்தே 

நனையும் தமிழரின் விழிகளே !!!

"நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்"

வாலி மீண்டும் வா நீ !!!
 

Comments

  1. Wow... hats off mani... tears in my eyes while reading this.. such a great legend what to do... we all miss a wonderful man...

    ReplyDelete
  2. Good Start to your writings, Mani..! Every Tamil Rasigan miss that Great Poet VAALI. Avan Irandhadhu kooda, unnidam kavithaiyai pirakkaththano..!

    But, one suggestion. Please try to concentrate on presenting your imaginations and thoughts and don't give too much emphasis to the last word rhyme -- in tamil "Iyaibu".

    ReplyDelete
    Replies
    1. thanks raja...!!! just tried to write in Vaali style to have a coincidence..will keep trying to improve

      Delete

Post a Comment

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!