அவர் சிரித்தாலே அந்தாதி , பாரதியின் சரி பாதி?!
அன்றொரு நாள் அந்தி வேளை , யாரும் இல்லா அழகிய பூஞ்சோலை சிவந்த வானம், சில்லென்று தென்றல், புல்வெளி போர்வை, சற்று தொலைவிலே - நிறைய வானமும் நீலமுமாய் கடல் கரை, எனக்குள் எதோ இனம்புரியாத மகிழ்ச்சி எதோ அதிசயம் நடக்க இருப்பதாய் ஒரு சமிஞ்ஞை என் விழித்திரையில் ஓர் உருவம், தங்கம் போல் மின்னும் மேனி, பால் போல் ஒளிரும் புன்னகை, கண்களிலே கவிம ண க்கும் தெய்வீகம், சந்தனக்கட்டை போல உடல்வாகு பட்டிலே வேட்டி கட்டி, கொஞ்சம் நளினமாய் - நடக்கும் பாவம்!! அவராக இருக்குமோ? திருக்குறளை தவிர எல்லா இலக்கியமும் படைத்தவர் இவரென்ற பலகாலம் நினைத்தேனே? சொல்லாத தத்துவமும், பாடாத உணர்வுகளும் இல்லை என அறிஞர் பல பாராட்ட கேட்டேனே அவர்தானோ?! விமர்சிக்க ஆசைகொண்டே படிக்கலானேன், விதியோ நான் அவரின் மொழி நடைக்கு அடிமையானேன் தித்திக்கும் தனி நடையால் தமிழரினம் குளிருவித்த அறிஞர்அவர் - முதன்முத...