என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை..,

என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை.., இது பெண்ணின் பெருமை பேசும் மாதம் ஆதலால் இது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். வரலாற்றில் பல புதுமை பெண்கள் நம் முன்னோர்களால் நமக்காக வரையருருக்கப்பட்டு உள்ளனர், அவர்களில் கற்பனை பாத்திரங்களும் உண்டு உண்மை மனிதர்களும் உண்டு. இதில் காலத்தின் சுழற்ச்சியால் மறக்கப்பட்டவர்களும், மறுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காப்பியம் என்பது அன்றைய சூழ்நிலையில் உள்ள மக்களின் பிரதிபலிப்பே ஆகும், அப்படி இன்றைய நம் சமுதாயத்தின் பெண்களின் நிலையை பிரதிபலிக்கும் என்னை பாதித்த வரலாற்று நாயகிகளை பற்றியே சிறியே தொகுப்பே இந்த பதிப்பு. சிலப்பதிகாரம் என்னும் நூல் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை வகுப்பதில் முக்கிய பங்குவகிப்பது, கண்ணகியை பற்றியே பெரும்பாலும் எல்லோரும் பேசுகிற, பேசிக்கொண்டிருக்கிற நிலையில், கண்ணகிக்கு நிகரான மரியாதையுடன் போற்றப்பட வேண்டிய மாதவியை பற்றியே என் கவனம் எல்லாம், ஏனெனில், துரோகம் செய்தது கோவலன் தவறு தூரிகை பெண்ணவள் மீதென்...