கவிஞர் நாள் ...

கவிஞரின் அரிய புகைப்படங்கள் உங்களுக்காக ..... ஒரு நாள் போதாது ஒவ்வொரு நாளும் வேண்டும் கவிஞரின் புகழ் பேச -எழுத - மகிழ வாழ்ந்த வாழ்க்கையில் பிழை உண்டு ஆனால் வார்த்தையில் பிழையில்லை எல்லோரும் கவிதை எழுதினார்கள் இவர் மட்டுமே கவிதையாய் எழுதினார் கண்ணதாசனை படியுங்கள் தமிழின் வளம் புரியும் கவிதை நெறி விளங்கும் கண்ணதாசனை கேளுங்கள் அழகியல் ரசனை மலரும் ஆழ் மனம் அமைதியை உணரும் கண்ணதாசனை உணருங்கள் உண்மையின் வலிமை தெரியும் உள்ளத்தில் உறுதி வளரும் எல்லோரும் கவிதை எழுதினார்கள் இவர் மட்டுமே கவிதையாய் எழுதினார் கவிஞர் என்றால் கண்ணதாசன் கவிதை என்றால் கண்ணதாசன் - என்றென்றும் கவிஞரின் தாசனாய் குருஸ்ரீ