மீசை இல்லா பாரதி - உயிர் ஆசை இல்லா..."பா - ரதீ"
"என் ஆட்சி நாற்காலியின் நான்கு கால்களில் மூன்று எதுவால் ஆனதோ எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களால் ஆனது" - இவை எம் ஜி யார் அவர்கள் முதன் முதலில் 1977ல் பதவி ஏற்கும்போது உதிர்த்த உணர்வுமிக்க வார்த்தைகள்
கவியரசரும் காவியக்கவிஞரும் எத்தனை எத்தனையோ பாடல்களால் எம் ஜி யாரின் புகழை உச்சத்தில் எடுத்து சென்றனர் என்பதும்,
எம் ஜி யார் என்கிற நிகரில்லா ஒளியின் வெளிச்சத்தை அவை கூட்டியது என்பதும், திண்ணம், இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை
எம் ஜி யார் என்கிற நிகரில்லா ஒளியின் வெளிச்சத்தை அவை கூட்டியது என்பதும், திண்ணம், இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை
இருப்பினும் இராமச்சந்திரனை - எம் ஜி யார் என்னும் அழிவில்லா புகழாக்கியத்தில் மிகபெரும் பங்கு....,
பாமரனுக்கு இலக்கியம் படைத்த பட்டுக்கோட்டை அவர்களையே சாரும் ...
பாமரனுக்கு இலக்கியம் படைத்த பட்டுக்கோட்டை அவர்களையே சாரும் ...
இலக்கணம், இலக்கியம் என்பதெல்லாம் மக்களின் அன்றாட வாழ்வியல் முறைகளை பிரதிபலிப்பதே என்பதில் என் போன்றோர்க்கு அதீத நம்பிக்கை விதைத்தவர்களில் மிக முக்கியமானவர் - பட்டுக்கோட்டை !!!
எட்டையபுரத்தான் விட்டுவிட்டு சென்றதை
எல்லாம் தொட்டு தொடர்ந்த தமிழ் மகன்
தூங்காமல் இருப்பதற்கும்
வன் கொடுமை ஒழிவதற்கும்
பெண் அடிமை களைவதற்கும்
சமத்துவம் பரவுதற்க்கும்
பாடி வைத்த பாடல்களை
நல்ல பாடங்களாய் தந்த மகன்
தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற
தங்க மகன்...
பட்டுக்கோட்டை கவிஞன் அவன்...
ரத்தத்தை வேர்வை என ஒழுகவிட்டு
உழைக்கின்ற பெருமக்கள் மகிழ்வதர்க்கே
பல நூறு பாடல்களை பாடிவிட்டு
சில ஆண்டு காலம் மட்டும்
பூமி தனில் தங்கிவிட்டு
புறப்பட்ட புலவன்...
எந்நாளும் தமிழ்
திரைப்பாட்டின் தலைவன்
மீசை இல்லா பாரதி -
உயிர் ஆசை இல்லா..."பா - ரதீ
சிலர் காலம் செய்த கோலம் என்றார்
பலர் காலன் செய்த பாவம் என்றார்
எப்படியோ இருக்கட்டும்
மறுபிறவி என்னும் மந்திரம் தெரிந்து கொண்டால்
மன்னவன் பிறந்து வர செய்திடுவேன்
ஏனென்றால்,
அருகம்புல்லுக்கும் வீரம் வரும்
கருங்கல்லுக்கும் மானம் வரும்
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருந்தால்
தமிழ் மொழியும் தழைத்திருக்கும்
ஈரமாய் நம் மனதில் தவழ்ந்திருக்கும்
தமிழர் தன்மானம் வளரட்டும் !!!
தமிழ் தன்னாலே வாழட்டும் !!!
மீண்டும் தொடர்வேன் தமிழின் புகழ்தனை
தன்மானத்துடன்
கு. ஸ்ரீமணிகண்டன்
Comments
Post a Comment