
பாரதியின் பேரன்கள் நாம் பாட்டெழுத மட்டுமல்ல ரௌத்திரமும் பழகிடுவோம்!!! தன் பாட்டுக்களால் பரங்கியரின் வேர் அதிர செய்தவன், எட்டயபுரத்தில் பிறந்து எட்டாத உயரத்தில் சிட்டாக பறந்தவன், தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த பெருமை தமிழன் ! அப்படி என்ன இருக்கிறது பாரதி பாட்டில் இதோ என் சிற்றறிவுக்கு எட்டிய பாரதியின் சில வரிகள், "யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் - காளி தெய்வ லீலை அன்றோ ?" என்றனுள்ள வெளியில் - ஞானத் திரவி ஏற வேண்டும் குன்ற மொத்த தோளும்- மேருக் கோல மொத்த வடிவும் நன்றி நாடு மனமும் - நீயென் நாலு மீதல் வேண்டும் ஒன்றை விட்டு மற்றோர் - துயரில் ...