ஸ்ரீமணிகண்டன் "in"  குட்டி கவிதைகள்



பகுத்தறிவு:

கடவுள் மறுப்பு என்பது மட்டுமே பெரும்பாலும் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளப்படுகிறது ?
அதனாலேயே அறிவு வகுக்கப்படுகிறதே தவிர
பெருக்கபடுவதில்லை!!

முரண்: 

அழகு ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் அழகாகவே இருக்கிறார்கள் !
பணம் ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் பணக்கரர்களாகவே இருக்கிறார்கள் ! - முரண்

இன்பமும் துன்பமும்:

எனக்கான சிக்கல்கள் பல நேரம் என்னிலிருந்தே தொடங்குகிறது - அதற்க்கான தீர்வுகள் பொதுவாக என்னிடமே உறங்குகிறது...இதனால் தானோ எனக்கான எந்த இன்பமும் வெகுநேரம் தொடர்வதில்லை,
என்னுடைய எந்த துன்பமும் பலநேரம் எனக்கு புரிவதே இல்லை !!! -

நானும் ஒலிபெருக்கியும் (Horn):

அதிகமுறை பயன்படுதபட்டாலும்
இன்றுவரை எதற்காக படைக்கப்பட்டதோ
அதற்காக பயன்பட்டதா என்பதே புரியவில்லை !!!

மதிக்கபடாத ஆசிரியர்கள் 

வீண் பேச்சு பெசுபவர்களிடமே மௌனத்தையும்
பொய் சொல்பவர்களிடமே உண்மையையும்
ஏமாற்றுபவர்களிடமே  நியாயத்தையும்
சுயநலவாதிகளிடமே பொதுநலத்தையும்
கற்றுகொண்டாலும் அத்தகைய ஆசிரியர்கள் மதிக்கபடுவதில்லை!!

சமுதாய முரண்பாடு : 

ஆயிரக்கணக்கில் சம்பாதித்து நூற்று கணக்கில் செலவு செய்தேன் - ஊதாரி என்றார்கள்
லட்சகணக்கில் கணக்கில் கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் வட்டி கட்டுகிறேன் - பொறுப்புள்ள பையன் வீடு வாங்கிட்டான் என்கிறார்கள் - சமுதாய முரண்பாடு

போராட்டம்:

இப்போதெல்லாம் போராட்டங்கள் குணம் ஆவதில்லை - அதிகம் பணம் ஆகிறது!!!???!!!
போராளிகள் எல்லாம் தலைவனாகவே ஆசைப்படுவதால்?!

நம்பிக்கை:

நம்பிக்கை என்பது உணர்வுகளின் அறிவு
சந்தேகம் என்பது அதன் உடன் பிறந்தது
நம்பிக்கைகளுக்கு ஆதாரங்கள் இருப்பதில்லை
ஏனென்றால் என் சந்தேகங்களே அதற்கு ஆணிவேராய் இருக்கின்றது

தயக்கம் 

உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியுலும் என்னுள் இருக்கும் கவிஞன் உயிர்பெருகிறான்  ஆனால் என்னுடைய எந்த கவிதையும் உன்னை போல் வசீகரிப்பதில்லை என்னை,
அதனால்தான் எனக்கு எப்போதும் காதலிக்கவும் கவிதை எழுதவும் -
தயக்கம் !!!

 - குருஸ்ரீ 




Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!