பாரதியின் பேரன்கள் நாம் பாட்டெழுத மட்டுமல்ல ரௌத்திரமும் பழகிடுவோம்!!!


தன் பாட்டுக்களால் பரங்கியரின் வேர் அதிர செய்தவன்,

எட்டயபுரத்தில் பிறந்து எட்டாத உயரத்தில் சிட்டாக பறந்தவன்,

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். 

மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். 

மகாகவி, 

முறுக்கு மீசைக்காரன், 

முண்டாசுக் கவி, 

பாட்டுக்கொரு புலவன், 

சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த பெருமை தமிழன் !



அப்படி என்ன இருக்கிறது பாரதி பாட்டில் இதோ என் சிற்றறிவுக்கு எட்டிய பாரதியின் சில வரிகள், 

"யாதுமாகி நின்றாய் காளி
 எங்கும் நீ நிறைந்தாய் 
 தீது நன்மை எல்லாம் - காளி 
 தெய்வ லீலை அன்றோ ?"
 என்றனுள்ள வெளியில் - ஞானத் 
 திரவி ஏற வேண்டும்
 குன்ற மொத்த தோளும்- மேருக் 
 கோல மொத்த வடிவும் 
 நன்றி நாடு மனமும் - நீயென் 
 நாலு மீதல் வேண்டும் 
 ஒன்றை விட்டு மற்றோர் - துயரில் 
 உழலு நெஞ்சம் வேண்டா "

 " எண்ணிய முடிதல் வேண்டும்
   நல்லன எண்ணல் வேண்டும் 
   திண்ணிய நெஞ்சம் வேண்டும்
  தெளிந்த நல்லறிவு வேண்டும்"

 " ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் 
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் 
    வேதிய ராயினும் ஒன்றே- அன்றி 
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே"
 இந்த நாட்டில பொறந்தாலே உயர் ஜென்மம் தானே என்றானே அதனால் தான் அவன் மகாகவி

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
 ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்..............மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம், வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம், சந்திதெருபெருக்கும் சாத்திரம் கற்போம்" 
தெருபெருக்குதலை சாத்திரத்தில் சேர்த்தான் அதனாலே மகாகவி

"மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை 
 வரிசை யாக அடுக்கி அதன்மேல் 
 சந்த னத்தை மலரை இடுவோர் 
 சாத்திரம் இவள் பூசனை யன்றாம். 
 வீடு தோறும் கலையின் விளக்கம், 
 வீதி தோறும் இரண்டொரு பள்ளி; 
 நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள் 
 நகர்க ளெங்கும் பலபல பள்ளி; 
 தேடு கல்வியி லாததொ ரூரைத் 
 தீயி னுக்கிரை யாக மடுத்தல் 
 கேடு தீர்க்கும் அமுதமென் அனனை 
 கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்"
தேடுல்கல்வி இல்லை என்றால் தீ இட்டு எரியுங்கள் என்று கூறிய  அந்த தொலைநோக்கு பார்வை யாருக்கு வரும்!!! மகாகவி க்கு தானே வரும்!!!

" இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் 
 அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; 
 அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 
 ஆல யம்பதி னாயிரம் நாட்டல். 
 பின்ன ருள்ள தருமங்கள் யாவும் 
 பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், 
 அன்ன யாவினும் புண்ணியம் கோடி 
 ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"

 கல்வி வியபார்மாகிவிடும் என்று அன்றே உணர்ந்ததால் தான் எழுத்தறிவித்தல் புண்ணியம் என்றான்,

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"  
இன்னும் நாம் இதை உணரவில்லை என்பதே உண்மை, வேதனை, வெட்கம்,

 "இதம் தரு மனையில் நீங்கி இடர் மிகு சிறை பட்டாலும் பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்திழிவுற்றாலும் விதம்தறு கோடி இன்னல் விளைந்தேன்னை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே!!"

"தேடி நிதம்  சோறு தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, வாடி துன்பமிக உழன்று, பிறர் வாட பல செயல்கள் செய்து, நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுன்கூற்றுக்கு இரையை ஆனா பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போல் நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!' 

 "நல்லோதோர் வீணை செய்தேன் அதை நலம்கெட   புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்?!?!"

இன்று இந்த ஏகாந்த கவிஞனின் நினைவை வெறும் ஒப்புக்கு எண்ணாமல் உளமார் எண்ணுவோம்,
" பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ளளால் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

பாரதியின் பேரன்கள் நாம் பாட்டெழுத மட்டுமல்ல ரௌத்திரமும் பழகிடுவோம்!!

 - குருஸ்ரீ

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!