எனக்கு பிடிக்குமென்று இந்த ஞாயிற்று கிழமையிலும்

ஞாயிற்று கிழமைகளில் வயது ஐந்து அதிகாலை நேரம், அப்பாவின் குரல், சில்லென குளியல், விபூதி வாசம், திருவப்பூர் கோவில், சைக்கிள் பயணம், கம்பன் முதல், வள்ளுவன் தொட்டு கண்ணதாசன் வரை இலக்கியம் பேசிவிட்டு கடன் கணக்கில் மனம் பரிமாறும் - அப்பா - பெரியப்பா தோழிகளுடன் விளையாட்டும் வேடிக்கையுமாய் அக்கா அன்பாக அம்மா உணவளித்தால் "எனக்கு பிடிக்குமென்று இந்த ஞாயிற்று கிழமையிலும் சுடச்சுட சாதம் வெண்டக்காய் பொறியல் முருங்கக்காய் சாம்பார் தக்காளி ரசம்" வயது பத்து சூரியன் உதிக்கையில் சூழ்நிலை எழுப்பிட கைகளில் மட்டை கண்களில் கனவு வெற்றியின் நினைவு ஊர் ஒர மைதானம் வெய்யில் தலை இரங்க வேர்வை உடல் பூக்க வீதியில் விளையாடும் விதியின் விளையாட்டு இந்த முறையும் விரக்தியாய் வீடு திரும்ப அப்பா கடு கடுக்க அம்மா சிடு சிடுக்க இலையில் பரிமாற...