சிந்தனை செய் மனமே...

இன்றைய நிலை 


சக பயணியின் கரங்களுக்கு 
இருக்கையின் கைப்பிடியை 
மறுக்கும் மனிதர்களே  - இங்கு 
பன்னாட்டு நிறுவனங்களின் 
இயற்கைவள சுரண்டல்களை 
முகநூலின் திரை கிழிய எழுதுகிறார்!!!

வீட்டில் வேலை செய்வோர்  
கேட்ட ஊதிய உயர்வுக்கு 
நூறுமுறை கேள்வி கேட்ட 
நுட்பமான வித்தகர்தாம்  - இங்கு 
விலைவாசி உயர்வு பற்றி 
விளா எலும்பு நோக விளிக்கின்றார்!!!



தன் மக்கள் தன் குடும்பம் 
தன் பிள்ளை தன் வாழ்வு 
என வாழும் வெட்கமில்லா 
வள்ளல் தெய்வங்களே - இங்கு 
பொறுப்பில்லா அரசியல் 
என்றே உணர்வுகளில் பொங்குகிறார்!!!

வறுமையின் கொடுமை தீர்க்க 
நாட்டில் நலன்கள் செழிக்க 
உண்மையாய் உழைத்த 
உத்தமர்களை தேடி அலுத்த 
பாரத அன்னை இப்போ 
பரலோகம் பார்த்து 
கண்ணீரில் கரைகின்றாள் !!!



எண்ணமும் எழுத்தும் 
குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

May Be - May Be Not !!!