புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவாகவே நம் எல்லோரிடமும் பழக்கமாகிவிட்ட ஓர் கசப்பான உண்மை என்னவென்றால் 

நமக்கு எதோ ஒன்று - உணவோ, உடையோ,நிறமோ, மனமோ, கலையோ, விளையாட்டோ, மனிதர்களோ இப்படி ஏதேனும் நாம் ரசிக்க கூடியவைகளில் நமக்கு பிடித்தமானதை தவிர அதற்கு நிகரனாவை அனைத்தையும் வெறுப்பது ஒரு தேசிய குணம் என்றாகிவிட்டது 

பெரும்பாலும் கலைத்துறையில் ஒரு நடிகரின் ரசிகர், அவருக்கு இணையாக தொழில் ரீதியான போட்டியில் உள்ள மற்றொரு நடிகரை மிக அவதூறாக பேசுவது, நினைப்பது என்று தொன்று தொட்டு நம் வியாதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது 

சமிபத்தில் என்னுடைய நண்பர்களில் சிலர் நான் கவிஞர் வைரமுத்து அவர்களின் மணி விழாவுக்காக எழுதிய வாழ்த்து கவிதை படித்துவிட்டு 

" நீ வாலி ரசிகன் தானே என்ன திடிர்னு வைரமுத்து" 



இந்த வரிகள் நிச்சயம் எனக்கு அபத்தமானவையாகவே தெரிகிறது ..ஆம் ஏனெனில் கலை என்பது ரசிக்க வேண்டியது கலைஞர்கள்  பாரட்டபடவேண்டியவர்கள் என்பது தான் நிதர்சனம் 

எனக்கு எம் ஜி யாரின் சுறுசுறுப்பு  பிடிக்கும்
சிவாஜியின் உணர்வும் பிடிக்கும் 
கலைஞரின் சாதுர்யம் என்னை இழுக்கும் 
ரஜினியின் வேகம் ரசிப்பேன் 
கமலின் கலையில் கலந்தேன்  
எம் எஸ் வி - இசை எனக்கு பால பாடம் 
இளையராஜா இசை என் உயிரில் உறவாடும்
ரகுமான் என் ரசனையின் பதிவாகும் 
ஸ்ரீதர் பாலசந்தர் மகேந்திரன் திரிலோகசந்தர் பாரதிராஜா, மணிரத்தினம், ஷங்கர்,மணிவண்ணன், செல்வராகவன், ரவிக்குமார், வெங்கட் பிரபு இன்னும் பல என அனைத்து இயக்குனர்களின் படங்களும் பிடிக்கும் 

மொத்தத்தில் எனக்கு 
சினிமா பிடிக்கும் 
பாடல் பிடிக்கும் 
இசை பிடிக்கும் 
கலை பிடிக்கும் 

எதற்கு இவ்வளவு நீண்ட தன்னிலை விளக்கம் தெரியுமா ?!?!


அப்பாவின் உந்துதலால் நிறைய கண்ணதாசன் பயின்றவன் இன்னும் சொல்லப்போனால் என் அப்பாவுடன் வாதாட வேண்டி கண்ணதாசன் படித்தேன் ...
னால் விதி வேறானது !!!எனக்கும் அவரின் தமிழ் வேரானது !!!



கவியரசருக்கு, அவரின் ஆளுமைக்கு சற்றே இணையான கவிஞராக வாழ்ந்தவர் வாலி...
பல பாடல்கள் கண்ணதாசன் அல்லது வைரமுத்து என நான் நினைத்து தேடியபோது ....!?!?!
வாலி என் வழி வந்தார்விழி நின்றார் !!!


எனவே நான் கவிதை ரசிப்பவன் இவர்கள் எல்லோரும் எனக்கு கவிதையாய், பாடலாய், தமிழாய் தெரிகிறார்கள் 

இனி ஒருவரை ரசிப்பதற்காக அவருக்கு தொழில் போட்டியாக உள்ள மற்றொருவரை வெறுக்க வேண்டியதில்லை என்ற அடிப்படை பாடம் பயின்றேன்...நன்றி!!!


சரி இப்போ விஷயத்துக்கு வருவோம் 

கவிஞர் வைரமுத்து 

எனக்கும் கவிதையின் அறிமுகம் தந்தவர் 
அந்த தமிழ் கவி சிற்பிக்கு இனிய மணி விழா வாழ்த்து 
ஸ்ரீமணிகண்டனின் வாழ்த்து கவிதை இதோ!!!


ஆகம விதிகளில் அகப்பட்டுத்  
தவித்த புதுக்கவிதைதனை  
புதியதாய் வார்த்தெடுத்த 
ஆதாம் கவிஞரே..!
கட்டுக்குள் அடங்கிடுமோ
என்ற திரைப் பாட்டின் 
கண்ணீரைத் துடைத்த 
காந்தக் கவிஞரே..!
தங்கள் வருகையை 
சிறுகூடல்பட்டி சிலாகித்து வரவேற்றது!!!
திருவரங்கம் வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியது !!!
அன்றுமுதல் ...
வடுகபட்டி கவிதை நகரானது !!!

புதுக்கவிதை ஓர் ஒளியாய் உருவானது !!!
கருப்பு - கவிதை நிறம் என்ற கர்வம் கொண்டது.மேகங்கள் போதி மரங்கள் எனப் பதவி கண்டது.
ஆகாயத்தில் தேடப்பட்டவை பூமியில் பிறந்தன- பல வண்ணங்களில்பூகம்பத்திலும் பூக்கள் மலர்ந்தன தமிழரின்  
எண்ணங்களில்
நீங்கள் காதல் எழுதியதால்...வல்லினங்கள் வருத்தப்பட்டன, இடையினங்கள் இறுமாப்புக் கொண்டன, மெல்லினம் இன்னும் மென்மையானது. 
நீங்கள் பேசுவதற்கென்றே தன்னை செம்மைப்படுத்திக் கொண்டது - மொழி.
உங்கள் வைகறை மேகங்களில் நனைந்த போதுதான் புதுக்கவிதை புதுமை அடைந்தது.
கண்ணகியிடம் கேள்வி கேட்கத் துணிந்ததுஅகலிகைக்கும் ஆதரவு தர முனைந்தது

எங்கள் கற்பனைகள் ஆகாயம் தொட்டது காதல் கவிதையிலும் - அறிவியல் துளிர் விட்டது
மதுவும் மாதுவும் கவிதையிடம் விவாகரத்து பெற்றது
பேனா முனையில் ரோஜா பூக்கும் அதிசயம் நிகழ்ந்தது
வார்த்தைகள் புது வடிவம் பெற்றதுவாக்கியங்கள் பல முழுமை கண்டதுசஹாராக்கள் பிருந்தாவனங்கள் ஆனதுபூமி முழுவதும் தமிழ்த் தேனாய்ப் பொழிந்தது
கரிசல் காட்டுக் குயில்கள் எல்லாம் பக்கிங்ஹாம் வரை பறந்தது...
நித்தம் நித்தம் புதிதாய்ப் பிறந்தோம். 
உங்கள் கவிதை வரிகளால் எல்லோரும் எல்லாமும்இன்பமாய் உணர்ந்தோம்!!!

மொத்தத்தில் தமிழ் இளமையானது,வளமையானது,இன்னும் இன்னும் வலிமையானது !!!
இது இளமையின் கனிவில் மிளிரும்  ஓர் தமிழ்ப் பெருங்கவிஞனுக்கு ...
மதி மயங்கி ஒரு ஏகலைவன் மழலையாய்த் தரும் வாழ்த்துப்பா!!!இது தங்களின் மணி விழாவுக்கு அல்ல நூற்றாண்டு விழாவில் வாசிக்க...  
இதை நீங்கள் வாசித்தாலே அது "மணி விழா" தான்..! (என் பெயர் ஸ்ரீமணிகண்டன்)

 நீங்கள் வாழக் கவிதை வாழும்..!உங்களைக் கொண்டாடி, தமிழ் திருவிழாக் காணும்..!
என்றும் உங்கள் கவிதையின் ரசிகனாய், உங்கள் தமிழின் விசிறியாய்..!
- குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!