என் மனசு!!!!

சித்தம் தனை செதுக்கி
நித்தம் தவம் புரிந்து
வார்த்தை வடம் பிடித்து
கருத்தை ஒன்றாக்கி
கவிதை செய்தால் - "எங்கே திருடினாய்"
என ஏளனம் செய்யும் அறிவாளி
நண்பனின் அசிங்கத்தில் வலித்தது
என் மனசு!!!

காலை பரபரப்பில், வேலை துரத்துவதில்,
சாலை நெரிசல்களில் சதிராட்டம் போட்டு
நீந்தி கடக்கயிலே - குறுக்கே
ஓடும் மூர்கக ஓட்டுணரின்
முட்டாள்தனத்தை கண்டு கொதித்தது
என் மனசு!!!

ராத்திரி நேரத்திலே
பௌர்ணமி வெளிச்சத்திலே,
தூறும் மழையினிலே,
நிசப்த நிலையினிலே -
துரத்தும் நாய்களின் குரலில்
பயந்து துடிக்குது
என் மனசு!!!

சேலை தரை தடவ,
மல்லிகை மனம் இழுக்க
நெற்றி குங்குமம் வட்டமாய் வலை விரிக்க,
சிரிப்பை சிதரவிட்டு
கடக்கும் ஆழகு பெண்னின்
விழியிஈர்ப்பு விசையினிலே வீழ்ந்தது
என் மனசு!!!

எல்லாம் தெரியுமென்று
எப்போதும் பேசுபவர்,
தன்னை மறந்து மற்றவரை எந்நாளும் ஏசுபவர்,
இழிச்சொல் வீசுபவர்,
தன் தவரொன்றை மறைக்கும் தருவாயில்,
ஏளனம் செய்துவிட தவிக்குது
என் மனசு!!!

சாதி வெறி பிடித்து
மனிதம் தனை வெறுத்து,
காதல் அதை கெடுத்து,
வீரம் என பேசும்
வீணர்களின் முகத்தில்
உமிழ்ந்து விட கொதித்தது
என் மனசு!!!

நுனி நாக்கு ஆங்கிலத்தை
அரை குறையாய்  படித்துவிட்டு
தமிழை மறந்துவிட்டு
தமிழ் நூலை படிக்காமல்
ஆங்கில நூல் தேடுபவர்
நிலையை நினைக்கயிலே நோகுது
என் மனசு!!!

சிங்கள நாட்டினிலே
சோழ வம்சத்தினர்
செத்து விழுகயிலே
புத்த பூமியிலே ரத்தம் வழிகயிலே
கோழை முகம் தரித்து,
அரசியல் அசிங்கம் கலந்து
வாழும் வாழ்க்கையிலே அழுகுது
என் மனசு!!!

எல்லாம் புரிந்தாலும்
உண்மை தெரிந்தாலும்
உலகம் நிகழ்த்துவதை
உணர்ந்தும் புரியாமல்
உளறுது
என் மனசு!!!


Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!