நண்பா!!!

இந்த பதிவு சிறு திருத்தங்களுடன் " நவீன சரஸ்வதி சபதம்" என்ற பெயரில் யோசி மாத இதழின் பிப்ரவரி 2014 பிரதியில் வெளியிடப்பட்டுள்ளது ஊக்கமளித்த அனைவருக்கும், வாய்ப்பளித்த யோசி ஆசிரியர் கவி. முருகபாரதி அவர்களுக்கும் மிக மிக நன்றி!!! "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று விவேகானந்தர் சொன்னார், ஆனால் நான் என்னை பற்றி சொல்வெதென்றால் கவியரசர் கண்ணதாசனின் பின்வரும் வரிகள் மிகவும் பொருத்தமாகவே இருக்கும், "பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவான்" என்றபோதும் இந்த உலகத்தின் மிக சிறந்த பண்பாளர்களை எனக்கு நண்பர்கள் ஆகும் வாய்ப்பை தருமோ இல்லையோ அறிவும், அன்பும், பண்பும் அதிகம் நிறைந்த மிக உயரிய நண்பர்களின் உலகத்தை என்னிடம் தந்து இருக்கிறது, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், புதுக்கோட்டையின் புழுதி படிந்த தெருக்களில்,கண்கள் முழுவதும் எதிர்கால ஏக்கத்தோடு, எண்ணம் எல்லாம் எழுச்சியோடு, முடிவில்லா கனவுகளை சுமந்து கொ...