நண்பா!!!

இந்த பதிவு சிறு திருத்தங்களுடன் " நவீன சரஸ்வதி சபதம்" என்ற பெயரில் யோசி மாத இதழின் பிப்ரவரி 2014 பிரதியில் வெளியிடப்பட்டுள்ளது 
ஊக்கமளித்த அனைவருக்கும், வாய்ப்பளித்த யோசி ஆசிரியர் கவி. முருகபாரதி அவர்களுக்கும் மிக மிக நன்றி!!!


"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று விவேகானந்தர் சொன்னார், ஆனால் நான் என்னை பற்றி சொல்வெதென்றால் கவியரசர்  கண்ணதாசனின் பின்வரும் வரிகள் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்,

"பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த 
 பேறு பெரும் இடத்தில இல்லாதவன்
 சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு 
 தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவான்"

என்றபோதும் இந்த உலகத்தின் மிக சிறந்த பண்பாளர்களை எனக்கு நண்பர்கள் ஆகும் வாய்ப்பை தருமோ இல்லையோ அறிவும், அன்பும், பண்பும் அதிகம் நிறைந்த மிக உயரிய நண்பர்களின் உலகத்தை என்னிடம் தந்து இருக்கிறது,

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், புதுக்கோட்டையின் புழுதி படிந்த தெருக்களில்,கண்கள் முழுவதும் எதிர்கால ஏக்கத்தோடு, எண்ணம்  எல்லாம் எழுச்சியோடு, முடிவில்லா கனவுகளை சுமந்து கொண்டு திரிந்த ஒரு இளைஞர் கூட்டம் தங்களின் அன்றாட விவாதங்களில் வந்து போகும் கல்வி, சாதி,மூட நம்பிக்கை, அறிவியல்,ஆன்மிகம்,ஆங்கிலம் இன்னும் பல கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க துணிந்து களம் கண்டனர் ........


நண்பா உருவானது, இன்று புதுக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது !!!

லாப நோக்கம் இல்லாமல் தங்கள் அடுத்த தலைமுறை சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டும் இந்த தலைமுறை நண்பர்களின் படை, 

காடுகளை அழிதத்தல்,சுற்றுபுறத்தை பாதுகாத்தல்,விவசாயத்தின் முக்கியத்துவம்,மது மற்றும் புகையினால் ஏற்படும் பாதிப்புகள்,மூட நம்பிக்கைகளால் ஏற்படும் விபரீதங்கள் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் , பெண்களை மதிக்காமல் இருத்தல், ஊழல் மற்றும் லஞ்சம், சாதி மத வேறுபாடுகள் ஆகியவற்றை களைய, நல்லதொரு சமுதாய மாற்றத்துக்கு கல்வி புரட்சி தான் சரியான தீர்வு.

" கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்கிறார் நம் தமிழ் பாட்டி அவ்வையார். கல்வி என்பது வெறும் பொருளாதாரம் ஈட்டும் கருவியாக இல்லாமல்,தனி மனித ஒழுக்கத்தை பயிற்றுவிப்பதன் மூலம் சமுதாய முன்னேற்றம் காணமுடியம் என்கிற எண்ணமே நண்பாவின் முதல் பயணம்.

பொருளாதாரத்தில் நலிந்த கிராமப்புற மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேல்படிப்பை தொடர வழிகாட்டுதல், பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்க ஆங்கிலம் மற்றும் நேர்முக தேர்விற்கான நுணுக்கங்களை "அறிவை விரிவு செய்" மூலம் பயிற்றுவித்தல், புதுக்கோட்டை நகரில் ஏழை எளிய மாணவர்களுக்காக நூலகம் நிர்வகித்தது, வாரந்தோறும் "பனித்துளிகள் " என்னும் வார இதழ், "சிந்தனை திறனாய்வு" கருத்தரங்கம் என்று தனது சிறகுகளை விரித்த வண்ணம் உள்ளது.


 இன்றைய தமிழ் நாட்டில் எல்லாமே ஆங்கிலம் என்று  நொண்டி சாக்கு சொல்பவர்கள் ஏராளம், ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டுமே கணினி கற்கமுடியும் என்பது தவறு ஆர்வம் இருந்தால் சாதாரணத் தமிழ்ப்படிப்புள்ள எவரும் கணினியில் கற்கவும், எழுதவும் முடியும்
ஆனால் நண்பா அறக்கட்டளை தமிழின் மாண்பை காக்க, விக்கிப்பீடியா“வில் தமிழில் எழுதுவது பற்றிய கணினிக் கருத்தரங்கம் ஒன்றை சென்ற அக்டோபர் மாதம் புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரியில் நடத்தினார்கள்.
இலவச மென்பொருள்களான இ.கலப்பை, முரசுஅஞ்சல், மற்றும் என்.எச்.எம்.ரைட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப்பட்டது அதோடு, தமிழில் மின்னஞ்சல் உருவாக்குவது, அனுப்புவது-பதில் பெறுவது பற்றியும் அதில் பயனர்கள் –குறிப்பாக இளம்பெண்கள்- எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடங்கள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இவைமட்டுமின்றி ஓவியப்பயிற்சி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி என்று முன்னேற துடிக்கும் இளையதலைமுறைக்கு தங்களின் சேவையை இது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் நண்பா!!

 "பிறந்தோம் இருந்தோம், இறந்தோம் என்ற வாழ்வை தூக்கி போடடா" என்ற காவியகவிஞர்  வாலியின் வார்த்தைகளை செயல்வடிவம் தரும் இந்த இனிய நண்பர்களை வாழ்த்துவோம், கைகொடுப்போம்,வலிமை சேர்ப்போம்!!!
"ஞாயிறின் ஒளியாய், 
வான்மழை முகிலாய், 
கற்கண்டு தமிழை, 
எண்ணத்தில் கணையாய் 
நல்லவர் மொழியாய் 
வளரட்டும் நண்பா 
வாழ்த்துங்கள் பலமுறை...
வழிகொடுங்கள்
சாதியற்ற, ஊழலற்ற  
அறிவுசார் சமுதாயம்
உருவாகட்டுமே நண்பா....!!!"
 - கு. ஸ்ரீமணிகண்டன்

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!