வழிகாட்ட வேண்டாமா?!?!


சந்தனமாய் மனமும் இல்லை,
முழு நிலவாய் ஒளியும் இல்லை, 
அறிவுடன் அன்பும் இல்லை, 
பரிவுடம் பண்பும் இல்லை, 

இல்லை என்ற கூட்டமும் 
உண்டு என்ற கூட்டமும் 
ஒன்றுமில்லா மக்களை 
சுரண்டித்தான் வாழ்கிறது
இறைவனிடம் கேட்கவில்லை?!?!

யார் வாழ்க்கை யார் கையில் 
கேட்பதற்கு நாதியில்லை 

போராட்டம் என்பதெல்லாம் 
பொய்வேடம் ஆனதனால் 
போராடும் தலைவன் எல்லாம் 
மண்ணுக்கும் விண்ணுக்கும் 
விடுப்பிலே சென்ற பின்னால்  
இருப்பதில் ஒரு சிலரும் 
வெறுப்பிலே போன பின்னால் 
இருப்பது  நம்பிக்கையே 
எதிர்வரும் தலைமுறையின் 
வைரங்கள் காத்திடுமா!?!?!
இல்லை... 
முன்னோர்கள் முட்டாள் 
என நம் போல புரியாமல் 
புலம்பிடுமா ?!?!









வழிகாட்ட வேண்டாமா?!?!

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!