ஆதலினால் காதல் மட்டும் செய்தது போதும் போதும்!!!
ஆதலினால் காதல் மட்டும் செய்தது போதும் போதும்!!!
என் இனிய இளைஞர்களே!!!
போதும் போதும்
இதுவரை...
காதல் காதல்
என்றே உளறி,
காலம் தந்த
எல்லா உணர்வும்
வீணாய் போனது
போதும்!!!
அன்னை தந்தை
அக்கா தங்கை
அண்ணன் தம்பி
உறவை வெறுத்தது
போதும்!!!
என்றே சொல்லி
நாட்டின் வளமும்
வீட்டின் நலமும்
இழந்து நிற்கிறோம்
போதும்!!!
கன்னியின் நினைவில்
காதலின் கனவில்
சிற்றின்ப நிலையில்
எல்லாம் இழந்தது
போதும்!!!
பார்வை இருந்தும்
கண்களை மறக்கும்
மெய்யா பொய்யா
உணரா நிலைமை
உணரா நிலைமை
போதும்!!!
அறிவும் பண்பும்
செயலின் திறனும்
நிறைய இருந்தும்
நன்மை இழந்தது
போதும்!!!
அறிவியல் அறமும்
சமூக அறிவும்
நம்மை விட்டு
தூரம் சென்றது
போதும்!!!
ஐந்தாம் வேதம்
எட்டாம் அதிசயம் என்றே
ஊரை உறவை,
நம்மை நாமே
ஏய்த்து கொண்டது
போதும்!!!
என் அருமை கவிஞர்களே!!!
மானாய் குயிலாய்
மயிலாய் நிலவாய்
தேனாய் மலராய்
இன்னும் பலவாய்
பெண்ணை மெதுவாய்
அடிமை கண்டது
போதும்!!!
மானும் குயிலும்
மயிலும் நிலவும்
தேனும் மலரும்
இன்னும் பலவும்
தங்கள் வாழ்வின்
பொருள்பட வேண்டும்
அன்பும் அறமும்
இனியவை பலவும்
ஒன்றாய் சேரும்
காலம்,
சாதி பேயும்,
கொடுமை குணமும்
தானாய் மாறும் மாறும்
காதல் என்னும் புனித உணர்வின்
மகத்துவம் கொஞ்சம் வாழும்
ஆதலினால் காதல் மட்டும்
செய்தது போதும் போதும்!!!
Comments
Post a Comment