காதலுக்கு தினம் உண்டு?? காவலர்க்கு தினம் உண்டா?!?! - வீர வணக்கம்


காதலுக்கு தினம் உண்டு?? காவலர்க்கு தினம் உண்டா?!?!


கோவில் திருவிழா, 
தேர்தல் பெருவிழா, 
சமுதாய போராட்டம், 
ஊரில் தேரோட்டம்,
சாதி கலவரம், 
வெடிகுண்டு நிலவரம், 
தலைவர்கள் கூட்டம், 
கேளிக்கை ஆட்டம்...

இன்னும் இன்னும் 
எத்தனை எத்தனையோ 
எல்லாவற்றுக்கும் இவர்கள் தான் பொறுப்பு 
எப்போதும் மக்களுக்கு இவர்கள் மீதே வெறுப்பு 


ஆதி தமிழர் ஆண்டவன் என்றான் ஊர் காக்கும் வீரர்களை 
இங்கே ....
பாதி தமிழன் மறந்து விட்டான் இவர் செய்யும் தியாகங்களை

மதிகெட்ட மனிதர்களே செவிகளை திறந்து கொள்ளுங்கள்,
கொஞ்சமேனும் சொரணை இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் 

 ஆண்டுதோறும் காதலுக்கு தினம் உண்டு??
நம்மை காக்கும் காவலர்க்கு தினம் உண்டா?!?!

வீர வணக்கம்!!! 


நாட்டின் எல்லை -  எந்நாளும் நிம்மதி இல்லை 
எப்போதும் எதிரிகள் தொல்லை - 
வீரர்களுக்கு பஞ்சமில்லை - ஆனாலும் போற்ற 
இங்கே நல்ல நெஞ்சம் இல்லை 



ஊர் விட்டு உறவு விட்டு தம் மக்களுக்காய் 
தன் உயிரையும்  விட்டு போராடியவனுக்கு ...
கண்ணில் நீர்த்துளி இல்லை பலருக்கு!!!


பிணமாக கண்டபின்னும் பெற்றவர் அழவில்லை - 
இனமான மற்றவர் எவருக்கும் அழுகை வரவில்லை -
முன்னவர் நாட்டின் பெருமை 
பின்னவர் சூடு சொரணையில்லாத எருமை ...

வீரவணக்கம்!!! 


 - குருஸ்ரீ

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!