அறிவியல் : கட - உள்

அறிவியல் எந்திரம்


எல்லாத்துக்கும் எந்திரம் இருக்குது 
எல்லாமே கண்டெடுத்த அறிவியல் அறிஞரிடம் 

ஆகாயம் வட்டமிட, 
விண்வெளிய நோட்டமிட
இதயத்த மாற்றிவிட 
செவ்வாயில் வாழ்ந்துவிட 
உலகத்தின் மூலையெல்லாம் 
ஒருநொடியில் கைப்பிடியில் பேசிவிட ...

ஆனாலும் ...

"சாக்கடைய அடைப்பெடுக்க !?
பிணத்த அறுத்தெடுக்க ?!
கழிவறை சுத்தம் செய்ய ?!
நினைக்கவே அருவருப்பா 
இருக்குற வேலைக்கெல்லாம் 
அறிவியல் எந்திரம் ஏதுமில்லை"

என்னப்போல உன்னைப்போல 
ரத்த்தமும் சதையுமா - வாழும் மனிதனுக்கு 
உதவாத அறிவியல்  இருந்தென்ன 
இல்லாம போனாதான் என்ன இப்போ ?!?!




அறிவாளி அண்ணன்களா !!!
அறிவியல் சிங்கங்களா !!!
மனித உரிமையிலே 
இதுதானே முதல் படி 

கொஞ்சம் மனிதனையும் நேசிக்கும் 
அறிவியலை வாசிப்போம்
மகத்தான  மனிதத்தின் 
அன்பையே நேசிப்போம்

- குருஸ்ரீ 

நானும் ஆத்திகனே!!!  




"சுடலமாடன்,
ஈனப்பேச்சி, 
இசக்கி அம்மன், 
தேரடிமாடன்,
மலைமாடன்,
முத்துப்பட்டன்,
கழுமாடன்,
வண்டிமறிச்சான்,
முண்டன், 
முத்தாரம்மன், 
சூலைப்பிடாரி, 
முப்பிடாரி,
சந்தன மாரி,"



 இப்படி மதம் சாரா மனித கடவுள்கள்  
 இருப்பதை என் மனம் உணரும்வரை,
 நானும் ஆத்திகனே!!!   

- குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!