வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!
கவிஞர் வாலி அவர்களின் தமிழ் புலமையும் வளமையும் உணர வேண்டுமானால் அவரது தனி கவிதை தொகுப்புகளை படித்து பாருங்கள் அவர் எத்தகைய சிறப்பான கவிஞர் என்பது புலப்படும் இதோ அவரின் முத்தான தனி கவிதைகளில் என் மனம் கவர்ந்தவைகளில் சில .... அதென்ன வாலி என பேரு ஆனா வால் இல்லையே என்ற விமர்சனத்துக்கு எழுதிய பதில் கவிதை, " வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?" நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!? என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ... "கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?" கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் பலியான பொழுது சிந்திய கண்ணீர் கவிதை "கோவில்கள் அதிகம் கொண்ட ஊராமே குடந்தை - அப்படியென்றால் இந்த அக்கிரமத்திற்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை" ஹைக்கூ !!! தன் தலையைச் சீவியவனுக்கே ! தண்...