கவிஞர் வாலி !!! - "புடவை கட்டியது போதுமென வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி" - 18-07-2014 - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
கவிஞர் வாலி !!!
யார் தெரியுமா -
கவிஞர்களின் தலைவா நீ!!!
புடவை கட்டியது போதுமென
வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி !!!கவிஞர் பா. விஜய் அவர்களின் வடித்த கண்ணீர் வரிகள் இவை !!!
தமிழ் திரைப்பாட்டு வரலாற்றில் வாலி பாடல்கள் என்பது எந்நாளும் ஒரு அடையாளமாகவே இருக்கும் ...இருந்துகொண்டே இருக்கிறது என்பதே நிஜம்
பாட்டு என்பது ஒரு கதையில் வரும் சூழலுக்கு அதில் தொடர்புடைய கதாபாத்திரம் பாடுவதாக அமைய வேண்டும் அதே சமயம் கவித்துவமாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருப்பதே நன்று...இது போல செய்தவர்களே திரை உலகில் சாதித்திருக்கிறார்கள் ஏனெனில் கவித்திறமை என்பது வேறு திரைப்பாட்டில் கவிதை என்பது வேறு...
திரைக்கு பாட்டு என்பதற்கு வாலியின் பின் வரும் ஒரு கவியரங்க கவிதையே மிக எளிமையாக விளக்கம் தரும்..,
இங்கே நான்வண்ணமொழிப் பிள்ளைக்குக்தாலாட்டும் தாய்;அங்கே நான்விட்டெறியும் எலும்புக்குவாலாட்டும் நாய்!மேலும்…எந்தப்பா சினிமாவில்எடுபடுமோ? விலைபெறுமோ?அந்தப்பா எழுதுகிறேன்;என்தப்பா? நீர் சொல்லும்!மோனை முகம் பார்த்துமுழங்கிட நான் முயற்சித்தால்பானை முகம் பார்த்தென்பத்தினியாள் பசித்திருப்பாள்கட்டுக்குள் அகப்படாமல்கற்பனைச் சிறகடிக்கும்சிட்டுக்கள் நீங்கள்;சிறியேன் அப்படியா?மெட்டுக்குள் கருத்தரித்துமெல்லவே இடுப்புநோகத்துட்டுக்குத் தகுந்தவாறுமுட்டையிடும் பெட்டைக்கோழி!
மெட்டுக்கு தகுந்தவாறு வார்த்தைகளை கற்பனைகளை விதைப்பதில் வாலியின் திறமை தனித்திறமை !!!
1960-1970
1970-1980
1980-1990
1990-2000
2000-2010
இந்த ஆண்டுகளில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நீங்கள் தலைசிறந்த பாடல் என்று நினைக்கும் திரைப்பாடல்களை வரிசை படுத்துங்கள் நிச்சயமாக சொல்கிறேன் 10 பாடல்களில் குறைந்தது 4 முதல் 5 பாடல்கள் வாலியின் பாடல்களாகவே இருக்கும் !!!
எவராலும் மறுக்கவோ தடுக்கவோ இயலாத உண்மை இது....
கவிஞர் மருதகாசி,
கவிஞர் தஞ்சை ராமையா,
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
கவியரசு கண்ணதாசன்,
கவிஞர் நா. காமராசன்,
கவிஞர் ஆலங்குடி சோமு,
கவிஞர் புலமைபித்தன்,
கவிஞர் மூ மேத்தா,
கவிஞர் முத்துலிங்கம்,
கவிஞர் கங்கை அமரன்,
கவிஞர் பஞ்சு அருணாசலம்,
கவிஞர் பிறைசூடன்,
கவிஞர் வைரமுத்து,
கவிஞர் பா விஜய்,
கவிஞர் நா முத்துக்குமார்
கவிஞர் தாமரை
கவிஞர் யுகபாரதி
கவிஞர் விவேகா
கவிஞர் பழனிபாரதி
கவிஞர் நெல்லை ஜெயந்தா ...... இன்னும் பலர்இத்தகைய கவிதை ஆளுமைகள் நம்ம ஒரு நூற்றாண்டு காலமாய் திரை பாடல்களில் மகிழ வைத்துள்ளனர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...
ஆனால் மேல குறிப்பிடப்பட்டுள்ள அனைவரோடும் கம்பீரமாய் அமர்ந்து தன் கப்பல் எந்த புயலிலும் திசை மாறாமல், தன் கடைசி மூச்சு வரை தமிழ் திரைஉலகம் தேடும் கவிஞராகவே வாழ்ந்த வரலாற்று நாயகன்
கவிஞர் வாலி !!!
"HE WAS THE MOST IN DEMAND POET IN THE INDUSTRY TILL HIS DEMISE"
ஒவ்வொரு தமிழ் மனதிலும் நீங்கா இடம் பெற்ற பாடல்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ...
ஆம் நீங்கள் எந்த இசை அமைப்பாளரின், எந்த பாடகரின், எந்த நடிகரின், ஏன் எந்த கவிஞரின் ரசிகனாக இருந்தாலும் நிச்சயம் நீங்கள் விரும்பி கேட்கும் பாடல்களில் குறிப்பிடத்தக்கவை ஆக வாலியின் வரிகளே நிறைந்திருக்கும்...கவிஞர் களே விரும்பும் கவிஞர் என அனைவரும் மகிழ்ந்து நெகிழ்ந்து போற்றும் பண்புடையவராக வாழ்ந்தவர்
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஒருவரால் தொடர்ந்து திரை உலகில் ஈரம் குறையாமல் வெளிச்சம் விலகாமல் வெற்றி பெற முடியும் என,
அதற்க்கான தகுதியும் முயர்ச்சியும் நாள்தோறும் வளர்த்து கொண்டவர் வாலி ...
சிலர் இன்னும் வாலி என்றால் ஆங்கிலம் கலந்து எழுதுவார், அர்த்தம் இல்லாத வார்த்தைகள் பயன்படுத்துவார் என்று பினாத்திகொண்டுதான் இருக்கிறார்கள்,
"நாம் கண் மூடி கொண்டதால் உலகம் இருண்டு விடாது, நமக்கு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் பயனளிக்காது இதுவே நிஜம்"
ஆம் எம் ஜி யாரின் பாடல்களாய் வர்ணிக்கப்படும் பல பாடல்கள் வாலியின் பேனா முனையில் முளைத்தவையே !!! அவரின் மிக மிக முக்கிய கொள்கை பாடல்களை வடித்தவர் வாலி என்னும் தமிழ் சிற்பி தான்
" என் காலம் வரும் என் கடமை வரும்" "மண் குடிசை வீடு என்றால் தென்றல் வர மறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா"
சிவாஜி அவர்களின் திரைப்பாடல்களில் முத்தாய்ப்பாய் அமைந்த பல பாடல்கள் வாலி எழுதியவையே - பெரும்பாலானவை கவியரசர் எழுதினர் என்பதில் சந்தேகம் இல்லை, இருப்பினும் சிவாஜிக்கு பல முத்தான வரிகளால் கௌரவம் சேர்த்தவர் வாலி
" பல நூல் படித்து நீ அறியும் கல்வி , பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம், பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம், இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"
பட்டுக்கோட்டை மறைந்த பிறகு ...கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞர் தன்னுடைய தனி தமிழால் "மாட்டு வண்டி போகாத ஊர்களிலும் பாட்டு வண்டி ஓட்டியவர்"
"கவிஞர் கண்ணதானுக்கு சற்றே இணையாக தமிழ் திரைஉலகில் இருந்த ஒரே கவிஞர் , கவிஞர் வாலி"
சொன்னவர் கவிஞர் வைரமுத்து ...
80களில் தமிழ் திரை பாடல்களின் திசையை மாற்றி அமைத்த மிக சிறந்த கவிஞர் - வைரமுத்து
இவர்கள் இருவரின் பங்களிப்பையும் இந்த நூற்றாண்டு தமிழ் திரை உலகம் மறுக்கவும் மறக்கவும் முடியாது ...இவர்கள் இருவரின் உச்ச காலங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்து தொடர்ந்து தேடப்படும் கவிஞர் ...வாலி தான்
வாலியின் பாடல்கள் நம் அனைவருக்கும் பிடிக்கும், வரிகளை இன்றளவும் ரசித்து கொண்டிருக்கிறோம் என்பது மறைக்கப்பட இயலாத உண்மை.
தமிழ் திரை உலகின் அடையாளாமாக இருக்கும் பலருக்கும் அவர்களது ஆதார பாடல் என்பதை எழுதியவர் வாலி என்றால் மிகை இல்லை
ஆம் கமலஹாசனுக்கு,
"உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்""நானாக நானில்லை தாயே"
ரஜினிக்கு,
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே"" தேவுடா தேவுடா "
இளையராஜாவின் மிக மிக அற்புதமான மெல்லிசை பாடல்களில் முதலாவதாய் வருவது " கண்ணன் ஒரு கை குழந்தை"
இளையராஜாவை நன்கு அறிந்தவர்களுக்கு அவரின் தமிழ் புலமை தெரியும் இளையராஜாவே விரும்பிய கவிஞர் என்றால் வாலி மட்டுமே
ரகுமான் என்றால் காதலர் தினம் , காதல் தேசம் , முன்பே வா என் அன்பே வா ....இன்னும் இன்னும்
அஜித் - வத்திகுச்சி பத்திகாது டா மற்றும் பல
விஜய் - எல்லாப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே இன்னும் பல
சூர்யா - நியூயார்க் நகரம் இன்னும் இன்னும்
தனுஷ் - சிம்பு-சிவகார்த்திகேயன் என எல்லோருக்கும் ஆதாரப்பாடல் வாலியின் பாடல் தான்வி குமார், சந்திரபோஸ், கங்கை அமரன், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், சிற்பி, கார்த்திக் ராஜா , யுவன் , இமான், அனிருத்
இப்படி எல்லா இசை அமைப்பாளர்களும் விரும்பிய ஒரே கவிஞர் வாலி என்றால் கொஞ்சமும் மிகை இல்லை
பின் வரும் சில பாடல்கள் பலரால் கவியரசர் எழுதியது என்றே கருதப்படும், கவிஞர் வாலியின் சொல்லோவியங்கள்
1) மாதவி பொன் மயிலாள் தொகை விரித்தால் 2) கண்போன போக்கிலே கால் போகலாமா 3) இதோ எந்தன் தெய்வம் முன்னாலே 4) தாமரை கன்னங்கள் 5) நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற 6) அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே 7) உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா 8)
நான் பாடும் பாடல்
இன்னும் பல...இதற்க்கு ஒரே ஒரு காரணம் தான், யாரும் கருதுவது போல் வாலி கண்ணதாசன் போல் எழுதவில்லை, இருவருமே நல்ல தமிழில், நயமான வார்த்தைகளில், அழகான வர்ணனைகளில் எழுதினார்கள் என்பதே திண்ணம்
இதோ பின் வருபவை பலரால் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியது என்றே இன்னும் எண்ணி கொண்டிருக்கும் பாடல்கள்
1) கேளடி கண்மணி, காதலன் சங்கதி 2) தூங்காத விழிகள் ரெண்டு 3) மலையோரம் வீசும் காத்து 4) பூவே செம்பூவே உன் வாசல் 5) இப்போ கப்பலேறி போயாச்சு 6) காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா 7)
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ 8) லேசா லேசா
இப்படி பல, இதற்கும் காரணம் ...இருவருமே அற்புதமான கற்பனைகளும் அழகிய வார்த்தைகளையும் ...காலத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தியவர்கள் என்பது மட்டுமே
ஆம் -
கண்ணதாசனுக்கு பிறகு யார்??? என்றால் வாலி!!!வைரமுத்துவிற்கு நிகராக யார்??? என்றாலும் வாலி !!!முத்துகுமார், விஜய், மதன் கார்கி போன்றோருக்கும் ஈடு கொடுத்த ஒரே கவிஞர் வாலி மட்டுமே !!!
தலைமுறைகள் கடந்து பாய்ந்த தமிழ் ஆறு உடலால் அழிந்தும் உணர்வோடு வாழும் வரலாறு !!!
காவியக்கவிஞரின் முதலாமாண்டு நினைவு நாளில் என்னுடைய கவிதாஞ்சலி ...
('வானம் தொட்டு போன' தேவர் மகன் பட பாட்டு மெட்டுக்கு நான் எழுதியது)
" கானம் விட்டுப்போன பாட்டுலகின் ராசா!!!எதுகை மோனை இப்போ வாடிப்போன ரோசா!!!
வார்த்தைக்குள்ள வார்த்தை அர்த்தம் சொல்லி பாட?!ஆளில்லாம தானே தமிழ்த்திரையுலகம் வாட!?வேதனையா போன மனிதர்களின் வாழ்வில்வெள்ளை தாடி தடவி வெண்பா சொல்லு காதில்பாமரனும் ரசிக்கும் எளிமையான பாட்டுஉன்னைப்போல பாட ஆளிருந்தா காட்டுவருந்தாம போச்சே தமிழர் இனம் ஏனோ?தத்தளிச்சு வாடுதய்யா நித்தம் மனம் தானே..."
தொடரும் !!!
என்றும் வாலியின் வரிகளோடு
குருஸ்ரீ
Comments
Post a Comment