தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவாகவே நம் எல்லோரிடமும் பழக்கமாகிவிட்ட ஓர் கசப்பான உண்மை என்னவென்றால் நமக்கு எதோ ஒன்று - உணவோ, உடையோ,நிறமோ, மனமோ, கலையோ, விளையாட்டோ, மனிதர்களோ இப்படி ஏதேனும் நாம் ரசிக்க கூடியவைகளில் நமக்கு பிடித்தமானதை தவிர அதற்கு நிகரனாவை அனைத்தையும் வெறுப்பது ஒரு தேசிய குணம் என்றாகிவிட்டது பெரும்பாலும் கலைத்துறையில் ஒரு நடிகரின் ரசிகர், அவருக்கு இணையாக தொழில் ரீதியான போட்டியில் உள்ள மற்றொரு நடிகரை மிக அவதூறாக பேசுவது, நினைப்பது என்று தொன்று தொட்டு நம் வியாதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது சமிபத்தில் என்னுடைய நண்பர்களில் சிலர் நான் கவிஞர் வைரமுத்து அவர்களின் மணி விழாவுக்காக எழுதிய வாழ்த்து கவிதை படித்துவிட்டு " நீ வாலி ரசிகன் தானே என்ன திடிர்னு வைரமுத்து" இந்த வரிகள் நிச்சயம் எனக்கு அபத்தமானவையாகவே தெரிகிறது ..ஆம் ஏனெனில் கலை என்பது ரசிக்க வேண்டியது கலைஞர்கள் பாரட்டபடவேண்டியவர்கள் என்பது தான் நிதர்சனம் எனக்கு எம் ஜி யாரின் சுறுசுறுப்பு பிடிக்கும் சிவாஜியின் உணர்வும் பிடிக்கும் கலைஞரின் சாதுர்யம் என்னை இழுக்கும் ரஜினியின் வேக
Comments
Post a Comment