ஒவ்வொரு முறையும்!!!! TRY TRY AND TRY AGAIN!!! LIFE IS CRAZY....Thinking in GSri way?!?!


ஒவ்வொரு முறையும், தோல்வியின் வலியில் வானம் பார்க்கையில்

வெண்ணிலா...

நாளும் தேய்ந்து வளர்ந்து என்மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது ?!?!

ஒவ்வொரு முறையும், அதிர்ஷ்டமில்லாதவன்!! என ஏங்கும் பொழுதில்  

செடிகள்...

உதிர்வதறிந்தும் தினமும் மலர்ந்து என் கவலை நீக்குகிறது ?!?!

ஒவ்வொரு முறையும், இனி என்ன செய்வது? என எண்ணும் நொடியில்

கடிகாரம்...

ஓயாமல் ஓடி காலத்தை வென்று என் மனம் தேற்றுகிறது ?!?!

ஒவ்வொரு முறையும் கேலிக்கு உள்ளாகி வீழ்ந்திடும் நிலையில் 

நிலைக்கண்ணாடி...

என் பிம்பத்தின் வழியில் உள்ளத்தை உறுதியாக்குகிறது ?!?!

ஒவ்வொரு முறையும் மீண்டும் முயலத்தான் போகிறேன் ஏனெனில் 

வாழ்க்கை...

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையை தந்துகொண்டிருக்கிறது ?!?!


- குருஸ்ரீ 


Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!