இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 14-04-2015


 
தித்திக்கும் மொழியெனவே எத்திக்கும் மணம் சேர்க்கும் 
முத்தமிழே, முது மொழியே, மூவாத உயர் தமிழே,
தத்தி வரும் பிள்ளை எந்தன் மங்காத புத்தி வழி
மன்னவரும் விண்ணவரும் வாழ்த்திடும் நற்கவிதையினை தா!!
நீர் வளமும் நில வளமும் எங்கெங்கும் நிறைந்திடவே- எங்கள் குலம் பேர் பெறவும் சீர் பெறவும் நல் வழியை தா !!
தொழில் வளமும்  அறிவியலும் வளம்பெறவே- எங்கள் அறிவினிலே நல்லறமென்னும் அருளினையே தா !!
 - குருஸ்ரீ 


நிறைவான அறிவுடனே நித்தமும் நான் மகிழ வேண்டும் !!
குறைவில்லா குணமெனவே  சுற்றம் எனை புகழ வேண்டும் !!
இல்லாதோர் இல்வாழ்வில் என்னாலே வளம் சேர வேண்டும் !! 
பெற்றவர், உற்றவர்,மற்றவர் அனைவரும் வாழ வேண்டும் !!

ஸ்ரீ சபரி மாமலையில் வாழ்கின்ற தெய்வத்தின் 
அருள் எந்நாளும் என்னோடு வேண்டும் !! வேண்டும் !!
 - குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!