நிலவிடம் கேட்டேன் ஒருமுறை!!!
நிலவிடம் கேட்டேன் ஒருமுறை!!!

இருளினில் வாடும் இரவினிலே
வெளிச்சத்தின் தேவைதனை
பூமிக்கு கொடையாய் தரும்
பூவை உந்தன் பேரழகை
பாட மொழி நூறு உண்டு பூமியிலே
ஆனாலும் அழகே உனைப்பாட
என் இனிமை தாய்மொழியை
துணையாய் எடுத்து வந்தேன்
பொதிகை மலை சாரலிலே
குறுமுனியின் வாக்கினிலே
கூடல் நகர் சங்கத்திலே
தவழ்ந்து வந்த என்னருமை தமிழினிலே
தன் கவியில் உன்னழகை
பலவிதமாய் உவமை சொன்னார்
கருமேக காதலனை மறுத்துவிட்ட மங்கை
உன் போல் மண்ணில் உள்ள பெண்ணினமும்
காதலை தவிக்கவிடும் குணமே கொண்டார்
எம் மனிதர் அன்றொருநாள்
உன் மண்ணில் கால் பதித்ததனால்
வடிவம் கெடவும் இல்லை
இருந்தபோதும்
நீயின்றி நாங்கள் வாழ
ஒருவழியுமில்லை!!
பால்வெளியில் விளையாடும்
பருவப்பெண்ணே
வெகுநாளாய்உன்னிடம் கேட்பதற்கு
கேள்விகள் ஆயிரம் உண்டு
என்றபோதும் ஒன்றை மட்டும் கேட்கின்றேன்
பதில் மொழிவாய் ...
இயற்கையாய் இன்றும் நீ
எந்நாளும் இரவுகளை
நிரப்புகிறாய் ....
என்றபோதும்
உன்னை உண்ண துடித்திட்ட
ராகுவும் கேதுவும்
அறிவியல் தூரம்வைத்த கோவில்
சிலைகளாய்?!?!
என்றும் வாடாத மலர்போலே
வான் தன்னில் மிதக்கிறாய் நீ மட்டும்
இயற்கையாய்
என்றும் காதலுக்கு
உவமையாய்
வாழ்வதின் அர்த்தமென்ன?!?!
ஓளி குறையா
திருமகளே திருவாய்
திறவாயோ
உந்தன் மௌனம்
கலைவாயோ
எந்தன் சலனம்
தீர்ப்பாயோ ?!?!
- குருஸ்ரீ
Comments
Post a Comment