Posts

Showing posts from 2013

ஆதலினால் காதல் மட்டும் செய்தது போதும் போதும்!!!

Image
ஆதலினால் காதல் மட்டும்  செய்தது போதும் போதும்!!! என் இனிய இளைஞர்களே!!! போதும் போதும்  இதுவரை... காதல் காதல்  என்றே உளறி, காலம் தந்த  எல்லா உணர்வும்  வீணாய் போனது  போதும்!!! அன்னை தந்தை  அக்கா தங்கை  அண்ணன் தம்பி  உறவை வெறுத்தது  போதும்!!! சாதியை ஒழிக்கும்  என்றே சொல்லி  நாட்டின் வளமும்  வீட்டின் நலமும்  இழந்து நிற்கிறோம்  போதும்!!! கன்னியின் நினைவில்  காதலின் கனவில் சிற்றின்ப நிலையில்  எல்லாம் இழந்தது  போதும்!!!  பார்வை இருந்தும்  கண்களை மறக்கும்  மெய்யா பொய்யா  உணரா நிலைமை  போதும்!!! அறிவும் பண்பும் செயலின் திறனும்  நிறைய இருந்தும்  நன்மை இழந்தது  போதும்!!! அறிவியல் அறமும்  சமூக அறிவும்  நம்மை விட்டு தூரம் சென்றது  போதும்!!! ஐந்தாம் வேதம்  எட்டாம் அதிசயம் என்றே  ஊரை உறவை,  நம்மை நாமே  ஏய்த்து கொண்டது  போதும்!!! என் அருமை கவிஞர்களே!!! மானாய் குயிலாய்  மயிலாய் நிலவாய்  தேனாய் மலராய் இன்னும் பலவாய்  பெண்ணை மெதுவாய்  அடிமை கண்டது

வழிகாட்ட வேண்டாமா?!?!

Image
சந்தனமாய் மனமும் இல்லை, முழு நிலவாய் ஒளியும் இல்லை,  அறிவுடன் அன்பும் இல்லை,  பரிவுடம் பண்பும் இல்லை,  இல்லை என்ற கூட்டமும்  உண்டு என்ற கூட்டமும்  ஒன்றுமில்லா மக்களை  சுரண்டித்தான் வாழ்கிறது இறைவனிடம் கேட்கவில்லை?!?! யார் வாழ்க்கை யார் கையில்  கேட்பதற்கு நாதியில்லை  போராட்டம் என்பதெல்லாம்  பொய்வேடம் ஆனதனால்  போராடும் தலைவன் எல்லாம்  மண்ணுக்கும் விண்ணுக்கும்  விடுப்பிலே சென்ற பின்னால்   இருப்பதில் ஒரு சிலரும்  வெறுப்பிலே போன பின்னால்  இருப்பது  நம்பிக்கையே  எதிர்வரும் தலைமுறையின்  வைரங்கள் காத்திடுமா!?!?! இல்லை...  முன்னோர்கள் முட்டாள்  என நம் போல புரியாமல்  புலம்பிடுமா ?!?! வழிகாட்ட வேண்டாமா?!?!

அவர் சிரித்தாலே அந்தாதி , பாரதியின் சரி பாதி?!

Image
அன்றொரு நாள்  அந்தி  வேளை , யாரும் இல்லா  அழகிய பூஞ்சோலை  சிவந்த வானம், சில்லென்று தென்றல், புல்வெளி போர்வை, சற்று தொலைவிலே -  நிறைய வானமும் நீலமுமாய்  கடல் கரை, எனக்குள் எதோ இனம்புரியாத மகிழ்ச்சி  எதோ அதிசயம்  நடக்க இருப்பதாய்  ஒரு சமிஞ்ஞை  என் விழித்திரையில் ஓர் உருவம், தங்கம் போல் மின்னும் மேனி,   பால் போல் ஒளிரும் புன்னகை, கண்களிலே கவிம ண க்கும் தெய்வீகம், சந்தனக்கட்டை போல உடல்வாகு   பட்டிலே வேட்டி கட்டி, கொஞ்சம்  நளினமாய் - நடக்கும் பாவம்!! அவராக  இருக்குமோ? திருக்குறளை தவிர எல்லா இலக்கியமும்  படைத்தவர் இவரென்ற பலகாலம் நினைத்தேனே? சொல்லாத தத்துவமும், பாடாத உணர்வுகளும் இல்லை  என அறிஞர் பல  பாராட்ட கேட்டேனே  அவர்தானோ?! விமர்சிக்க ஆசைகொண்டே படிக்கலானேன்,  விதியோ நான் அவரின் மொழி நடைக்கு அடிமையானேன்   தித்திக்கும் தனி நடையால் தமிழரினம் குளிருவித்த  அறிஞர்அவர் - முதன்முதலாய் தனக்கு தானே இரங்கற்பா  பாடிவைத்த மகாகவியோ?  அந்த முன்நெற்றி  வழுக்கயில்தான் முத்தமிழ் சங்கமிக்கும், அரசியல் ஆன்மீகம், திர

BUT FOR WHAT PURPOSE?!?!

Image
Sometimes we drive our-self crazy for no reason for no purpose on very very minor concerns, issues, events, occurrences, incidents etc. what is highly unfortunate thing in such is we never realize or recognize what we do?!.. Ø    We firmly believe that what career/personal decision we have taken is more precise than what others did, But for what purpose? Ø    Bargaining with vegetable vendors, auto drivers, But for what purpose? Ø    Guiding others even though they are completely aware of the route or whatever it is, But for what purpose? Ø    When we use horn for no reason as if we have to reach first before everyone else in the road, But for what purpose? Ø    Even in temples, we try to take more time when we are near the deity as if we only own all the rights to pray but when others do we comment them as manner less, But for what purpose? When we board a day train with lower berth, mostly we pretend to lay down as if we are sleepy just for the sake of
Image
பாரதியின் பேரன்கள் நாம் பாட்டெழுத மட்டுமல்ல ரௌத்திரமும் பழகிடுவோம்!!! தன் பாட்டுக்களால் பரங்கியரின் வேர் அதிர செய்தவன், எட்டயபுரத்தில் பிறந்து எட்டாத உயரத்தில் சிட்டாக பறந்தவன், தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்.  மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன்.  மகாகவி,  முறுக்கு  மீசைக்காரன்,  முண்டாசுக் கவி,  பாட்டுக்கொரு புலவன்,  சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த  பெருமை தமிழன்  ! அப்படி என்ன இருக்கிறது பாரதி பாட்டில் இதோ என் சிற்றறிவுக்கு எட்டிய பாரதியின் சில வரிகள்,  "யாதுமாகி நின்றாய் காளி  எங்கும் நீ நிறைந்தாய்   தீது நன்மை எல்லாம் - காளி   தெய்வ லீலை அன்றோ ?"  என்றனுள்ள வெளியில் - ஞானத்   திரவி ஏற வேண்டும்  குன்ற மொத்த தோளும்- மேருக்   கோல மொத்த வடிவும்   நன்றி நாடு மனமும் - நீயென்   நாலு மீதல் வேண்டும்   ஒன்றை விட்டு மற்றோர் - துயரில்   உழலு நெஞ்சம் வேண்டா "  " எண்ணிய முடிதல் வேண்டும்    நல்லன எண்ணல் வேண்டும்     திண்ணிய நெஞ்சம் வேண்டும்   தெளிந்த நல்லற
Image
             ஸ்ரீமணிகண்டன் "in"  குட்டி கவிதைகள் பகுத்தறிவு: கடவுள் மறுப்பு என்பது மட்டுமே பெரும்பாலும் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளப்படுகிறது ? அதனாலேயே அறிவு வகுக்கப்படுகிறதே தவிர பெருக்கபடுவதில்லை!! முரண்:   அழகு ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் அழகாகவே இருக்கிறார்கள் ! பணம் ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் பணக்கரர்களாகவே இருக்கிறார்கள் ! - முரண் இன்பமும் துன்பமும்: எனக்கான சிக்கல்கள் பல நேரம் என்னிலிருந்தே தொடங்குகிறது - அதற்க்கான தீர்வுகள் பொதுவாக என்னிடமே உறங்குகிறது...இதனால் தானோ எனக்கான எந்த இன்பமும் வெகுநேரம் தொடர்வதில்லை, என்னுடைய எந்த துன்பமும் பலநேரம் எனக்கு புரிவதே இல்லை !!! - நானும் ஒலிபெருக்கியும் (Horn): அதிகமுறை பயன்படுதபட்டாலும் இன்றுவரை எதற்காக படைக்கப்பட்டதோ அதற்காக பயன்பட்டதா என்பதே புரியவில்லை !!! மதிக்கபடாத ஆசிரியர்கள்  வீண் பேச்சு பெசுபவர்களிடமே மௌனத்தையும் பொய் சொல்பவர்களிடமே உண்மையையும் ஏமாற்றுபவர்களிடமே  நியாயத்தையும் சுயநலவாதிகளிடமே பொதுநலத்தையும் கற்றுகொண்டாலும் அத்தகைய ஆசிரியர்கள் மதிக்கபடுவதில்லை!!

என் மனசு!!!!

Image
சித்தம் தனை செதுக்கி நித்தம் தவம் புரிந்து வார்த்தை வடம் பிடித்து கருத்தை ஒன்றாக்கி கவிதை செய்தால் - "எங்கே திருடினாய்" என ஏளனம் செய்யும் அறிவாளி நண்பனின் அசிங்கத்தில் வலித்தது என் மனசு!!! காலை பரபரப்பில், வேலை துரத்துவதில், சாலை நெரிசல்களில் சதிராட்டம் போட்டு நீந்தி கடக்கயிலே - குறுக்கே ஓடும் மூர்கக ஓட்டுணரின் முட்டாள்தனத்தை கண்டு கொதித்தது என் மனசு!!! ராத்திரி நேரத்திலே பௌர்ணமி வெளிச்சத்திலே, தூறும் மழையினிலே, நிசப்த நிலையினிலே - துரத்தும் நாய்களின் குரலில் பயந்து துடிக்குது என் மனசு!!! சேலை தரை தடவ, மல்லிகை மனம் இழுக்க நெற்றி குங்குமம் வட்டமாய் வலை விரிக்க, சிரிப்பை சிதரவிட்டு கடக்கும் ஆழகு பெண்னின் விழியிஈர்ப்பு விசையினிலே வீழ்ந்தது என் மனசு!!! எல்லாம் தெரியுமென்று எப்போதும் பேசுபவர், தன்னை மறந்து மற்றவரை எந்நாளும் ஏசுபவர், இழிச்சொல் வீசுபவர், தன் தவரொன்றை மறைக்கும் தருவாயில், ஏளனம் செய்துவிட தவிக்குது என் மனசு!!! சாதி வெறி பிடித்து மனிதம் தனை வெறுத்து, காதல் அதை கெடுத்து, வீரம் என பேசும் வீணர்களின் முகத்தில் உமிழ்ந்து விட க

வாலி மீண்டும் வா நீ !!!

Image
தமிழ் மொழி மீளா துயரில் வீழ்ந்தது இன்று, எதுகையும் மோனையும் இறந்தது கண்டு, நீ  திருவரங்கம் விட்டு திரையரங்கம் வந்தவன் Kaaviya Kavingar Vaali எந்த தமிழரங்கிலும் தனியரங்கம் அமைப்பவன் கற்பனை தமிழும் விற்பனை தமிழும் தமிழன் மொழிந்தது உன்னால் கோடம்பாக்கம் நின்றது உந்தன் பின்னால் . நீ இயற்றிய பாடல்களை திருவாய் மலர்ந்தது   ராமாவரம் அப்பாடல்கள் தானே பாமரர் மனதில் பெற்றது இறவாவரம் அவ்வழியே ராமாவரம் தொடங்கியது  ராயபேட்டை வென்றது சென்ட் ஜார்ஜ் கோட்டை, அவர் தொண்டர்கள் தாங்கி நின்றது உந்தன் பாட்டை !!! இருளில் கிடந்த தமிழிசைக்கு புது உயிர் கொடுத்தவர் மெல்லிசை மாமன்னன் விசு ...நீர்அதற்கு வரிகளை வார்த்தெடுத்த காமதேனு பசு!! அதனால்தானே எங்கள் கவியரசர் விரும்பினார் தன நீள்துயிலை கவிபாட தகுந்தவன் நீ என்று பண்ணைபுரத்தை விட்டு வந்த இசைமேனி உந்தன் வசமாகி, உன்னோடு இணைந்தது, தமிழனின் இசை தரணி  எங்கும் மலர்ந்தது இசைஞானியின் புகழை வானும் மண்ணும் வியந்தது !!! இசையால் வசியம் செய்யும் கலையை பெற்றான் மதராசின் அசல் முசல்மான், உன் வரிகள் தான் அவன் இசையை நிதர்சனமாய் தாங்கி நின்ற ஹன

A Journey to remember!!!

Image
Starting my blog by sharing one of the most impressive travelling experiences I have ever had in my life, h ave tried my best to narrate it crispy and simple and it is just the chain of incidents happened in a day travel   I was suppose to return from an official tour to Mumbai for offer preparation works, it was a horrible 2days at work. After completing all my works, I came back to our guesthouse near Lok upavan in Thane @ 6:30PM to pack all my things and to reach Kalyan railway station to board my train @ 10.35PM. However, I was exhausted enough to enjoy a nap. It happens - Time is 08:45PM. Had no time to breath I was jus dancing in the air …thanks to the caretaker for those hot chapathis & dhal took an auto reached Thane railway station @ 09:35 PM Getting tickets to suburban trains in Mumbai is art of combat in a queue, which almost seems has no end??!! In addition, my dear citizens of Mumbai did all humpty dumpty to get tickets without following th