Posts

Showing posts from October, 2015

கலைஞர் - குருவின் எண்ணம், குருஸ்ரீயின் கை வண்ணம் !!!

Image
நினைவுகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்  - குருவின் எண்ணம் குருஸ்ரீயின் கை வண்ணம் !!! புஞ்சையும் நஞ்சையும் பொய்யாகாத தஞ்சை மண்ணில்  மொழியும் உணர்வும் பின்னி பிணைந்த காலம் தன்னில்,  ஊரெல்லாம் ஒன்று கூடி, தெருவெல்லாம் கோஷம் பாடி, கடல் அலை தோற்கும் வகையில் கூட்டமோ கூடி நிற்க,  கரகர குரலில் கனல் தமிழ் பொங்கி வர, சிறுவன் நான் சிலிர்த்திடவே !!!  உருமிடும் சிங்கம் போல, உடன்பிறப்பே என்ற ஒரு வார்த்தை கேட்டவுடன்  உணர்ச்சி  பெருக்கிலன்றோ சிரக்கம்பம் செய்தார் தொண்டர் !!??!! நேர்வகுடு கொண்ட தலையோ, நேரிசையாய் நம்மை சேர்க்கும், வளர் பிறைபோல் நெற்றி, நிறையசையை நம்மில் ஈர்க்கும், கண்ணாடி உள்ளே விழிகள், சிலேடையில் வண்ணம் சேர்க்கும்  கையிலே சுழன்டிருக்கும் துண்டிலே, எதுகை மோனை இணைந்திருக்கும்  உள்ளத்து மொழியை மெல்ல உதட்டிலே  கோர்த்து,  வெள்ளத்து நீரைப்போல சரளமாய் சந்தம் வார்த்து, எண்ணத்தில் என்றும் இனமான உணர்வை சேர்த்து, வையத்தில் இன்றுவரை தமிழரின் மானம் காத்து, வெண்ணிற ஆடை உள்ளே மந்திர சொல்லால் அன்று, தன்னிகரில்லா தமிழால் தரணி