Posts

Showing posts from 2016

பட்டாம்பூச்சி விற்பவன் எங்கே? வாடுது பட்டாம்பூச்சிகள் இங்கே ?!

Image
சினிமா என்னும் அரிய ஊடகத்தின் மேல் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். சினிமா என்றால் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களை மட்டுமன்றி தொழில்நுட்ப ரீதியிலும் சினிமாவை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தவன். அதுவும் திரை இசை பாடல்கள், உங்கள் எல்லாரையும் போலவே என்னுள் பல ஏகாந்த அதிர்வுகளை உண்டாக்கியது என்பது உண்மையே!!!.  எம் எஸ் வி, கே வி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், வி குமார், ரகுமான், தேவா, சிற்பி,வித்யாசாகர், ராஜ்குமார், யுவன்  என மிக நீளமான பட்டியல்...குறிப்பாக எந்த ஒரு பாட்டிலும் அதன் வரிகளை கவனிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு அதற்கு நான் வளர்ந்த சூழலும் ஓர் காரணம். பாரதி, பாரதிதாசன், ராமையா தாஸ், மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, கவி கா. மு. ஷெரிஃப், கவியரசர் கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,காவிய க்க விஞர் வாலி,புலமைப்பித்தன்,மூ. மேத்தா, முத்துலிங்கம், அறிவுமதி , பிறைசூடன், வைரமுத்து, பழனிபாரதி, விஜய், கமல், சினேகன்,  என இதுவும் ஒரு நீண்ட பட்டியல்....ஒவ்வொரு பாடல்களிலும் வரும் உவமைகள், வார்த்தை வடிவங்கள், இசைக்காக

குருஸ்ரீ - தந்தையர் தினக்கவிதை !!!

Image
ஆறு வருடங்களுக்கு  முன் என் அப்பாவின் பிறந்த நாளுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கையை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை தன் ஒவ்வொரு அசைவுகளிலு ம் செயல்களிலும் எனக்கு புரிய வைத்ததை எழுதி இருந்தேன், இன்றளவும் ...என்றென்றும் அவை உண்மை என்பதால் இந்த தந்தையர் தினத்திற்காக அக்கவிதையை பதிவிடுகிறேன் .... அன்புள்ள அப்பாவுக்கு உன்னால் நான் ரசித்தவர்கள் சில இதோ....., பௌர்ணமி நிலா, கார்த்திகை குளிர், மார்கழி பனி, மலையருவி குளியல், மலராத ரோஜா, மல்லிகை வாசம், கொட்டும் மழை, ரயில் பயணம், அதிகாலை வானம், சூடான தேனீர், சுவையான உணவு, ஓயாத அலை, ஓவிய சிலை, சாய்ந்தாடும் மயில், சங்கீத குயில், சிரிக்கின்ற குழந்தை, சிவப்பான வானம், தூரத்து மேகம், கற்பூர வாசம், காகித கப்பல், மெல்லிய தென்றல், புல்வெளி பாதை, பூப்போன்ற சாதம், அம்மாவின் ரசம், பூவையர் விழிகள், மரத்தடி நிழல், மயக்கும் மாலை, பாரதி பாட்டு, கம்பன் காவியம், கவியரசர் கவிதை, சுஜாதா கதை, சுட்டாலும் வெயில், சுத்தமான நெய், எப்போதும் நான் !!! என்றாலே நீ !!!......................... .............................குருஸ்ரீ  THE GREATEST GIFT I HAVE EVER HA