Posts

Showing posts from September, 2013
Image
பாரதியின் பேரன்கள் நாம் பாட்டெழுத மட்டுமல்ல ரௌத்திரமும் பழகிடுவோம்!!! தன் பாட்டுக்களால் பரங்கியரின் வேர் அதிர செய்தவன், எட்டயபுரத்தில் பிறந்து எட்டாத உயரத்தில் சிட்டாக பறந்தவன், தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்.  மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன்.  மகாகவி,  முறுக்கு  மீசைக்காரன்,  முண்டாசுக் கவி,  பாட்டுக்கொரு புலவன்,  சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த  பெருமை தமிழன்  ! அப்படி என்ன இருக்கிறது பாரதி பாட்டில் இதோ என் சிற்றறிவுக்கு எட்டிய பாரதியின் சில வரிகள்,  "யாதுமாகி நின்றாய் காளி  எங்கும் நீ நிறைந்தாய்   தீது நன்மை எல்லாம் - காளி   தெய்வ லீலை அன்றோ ?"  என்றனுள்ள வெளியில் - ஞானத்   திரவி ஏற வேண்டும்  குன்ற மொத்த தோளும்- மேருக்   கோல மொத்த வடிவும்   நன்றி நாடு மனமும் - நீயென்   நாலு மீதல் வேண்டும்   ஒன்றை விட்டு மற்றோர் - துயரில்   உழலு நெஞ்சம் வேண்டா "  " எண்ணிய முடிதல் வேண்டும்    நல்லன எண்ணல் வேண்டும்     திண்ணிய நெஞ்சம் வேண்டும்   தெளிந்த நல்லற
Image
             ஸ்ரீமணிகண்டன் "in"  குட்டி கவிதைகள் பகுத்தறிவு: கடவுள் மறுப்பு என்பது மட்டுமே பெரும்பாலும் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளப்படுகிறது ? அதனாலேயே அறிவு வகுக்கப்படுகிறதே தவிர பெருக்கபடுவதில்லை!! முரண்:   அழகு ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் அழகாகவே இருக்கிறார்கள் ! பணம் ஒரு பொருட்டல்ல என்பவர்கள் பெரும்பாலும் பணக்கரர்களாகவே இருக்கிறார்கள் ! - முரண் இன்பமும் துன்பமும்: எனக்கான சிக்கல்கள் பல நேரம் என்னிலிருந்தே தொடங்குகிறது - அதற்க்கான தீர்வுகள் பொதுவாக என்னிடமே உறங்குகிறது...இதனால் தானோ எனக்கான எந்த இன்பமும் வெகுநேரம் தொடர்வதில்லை, என்னுடைய எந்த துன்பமும் பலநேரம் எனக்கு புரிவதே இல்லை !!! - நானும் ஒலிபெருக்கியும் (Horn): அதிகமுறை பயன்படுதபட்டாலும் இன்றுவரை எதற்காக படைக்கப்பட்டதோ அதற்காக பயன்பட்டதா என்பதே புரியவில்லை !!! மதிக்கபடாத ஆசிரியர்கள்  வீண் பேச்சு பெசுபவர்களிடமே மௌனத்தையும் பொய் சொல்பவர்களிடமே உண்மையையும் ஏமாற்றுபவர்களிடமே  நியாயத்தையும் சுயநலவாதிகளிடமே பொதுநலத்தையும் கற்றுகொண்டாலும் அத்தகைய ஆசிரியர்கள் மதிக்கபடுவதில்லை!!