Posts

Showing posts from 2015

மதிப்பிற்குரிய மழையே !!!

Image
மதிப்பிற்குரிய மழையே !!! வணக்கம், நலம் நலமறிய ஆவல் !!! நாங்கள் நலமில்லாததை அறிவதில் உனக்கென்ன ஆவல் ?!?! நீரின்றி அமையாது உலகு !!! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாடி வைத்தவர் பாடி வைத்தது !!! முழுவதும் நீரானாலும் அமையாது உலகு !!! முதலில் இதை நீ உணர் ??!! சீராக்க வேண்டிய நீர் !!! இன்று பாழாக்கலாமா ?!?! பயிர்களை வீணாக்கலாமா ?!?! வாடிய பயிர் வாடாமல் வரத்தானே வேண்டினார் வடலூரார் அன்று, வடிய வழியின்றி வாட்டி வதைக்கிறாய் என்றல்லவா!!????!! அழுகிறார் கடலூரார் இன்று ?!?! மண்ணில் யாவும் செழிப்பாக  - பெய்தால் இயற்கை  -  இறை-கை !!! கண்ணில் கண்ணீர் பெருக்காக பெய்தால் இயற்கை  - வழுக்கை ?!?! நீர் !!! மண்ணில் உயிர்கள் வாழ ஆதாரம் !!! இன்றோ உன்னால் எவ்வளவு சேதாரம் ??? உலகை காக்கும் நீர் !!! - இது முன்னோர் நெறி !!! அத்தகைய நீருக்கு வரலாமா கொலைவெறி ?!?! இன்றுவரை மழை இயற்கையின் சந்தோஷம் !!! இன்றோ!?!?! இங்கீதம் தெரியாத சங்கீதம் ??? போதும் அளவோடு நிப்பாட்டு !!! இதுவே என் பாட்டு ?!?! - குருஸ்ரீ 

கலைஞர் - குருவின் எண்ணம், குருஸ்ரீயின் கை வண்ணம் !!!

Image
நினைவுகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்  - குருவின் எண்ணம் குருஸ்ரீயின் கை வண்ணம் !!! புஞ்சையும் நஞ்சையும் பொய்யாகாத தஞ்சை மண்ணில்  மொழியும் உணர்வும் பின்னி பிணைந்த காலம் தன்னில்,  ஊரெல்லாம் ஒன்று கூடி, தெருவெல்லாம் கோஷம் பாடி, கடல் அலை தோற்கும் வகையில் கூட்டமோ கூடி நிற்க,  கரகர குரலில் கனல் தமிழ் பொங்கி வர, சிறுவன் நான் சிலிர்த்திடவே !!!  உருமிடும் சிங்கம் போல, உடன்பிறப்பே என்ற ஒரு வார்த்தை கேட்டவுடன்  உணர்ச்சி  பெருக்கிலன்றோ சிரக்கம்பம் செய்தார் தொண்டர் !!??!! நேர்வகுடு கொண்ட தலையோ, நேரிசையாய் நம்மை சேர்க்கும், வளர் பிறைபோல் நெற்றி, நிறையசையை நம்மில் ஈர்க்கும், கண்ணாடி உள்ளே விழிகள், சிலேடையில் வண்ணம் சேர்க்கும்  கையிலே சுழன்டிருக்கும் துண்டிலே, எதுகை மோனை இணைந்திருக்கும்  உள்ளத்து மொழியை மெல்ல உதட்டிலே  கோர்த்து,  வெள்ளத்து நீரைப்போல சரளமாய் சந்தம் வார்த்து, எண்ணத்தில் என்றும் இனமான உணர்வை சேர்த்து, வையத்தில் இன்றுவரை தமிழரின் மானம் காத்து, வெண்ணிற ஆடை உள்ளே மந்திர சொல்லால் அன்று, தன்னிகரில்லா தமிழால் தரணி

COMMON SENSE IS NOT COMMON...?!?!

Image
On a hectic month which had lot of discussions, meetings, excel sheets etc words from one of our senior collegue made me think a lot suddenly in a philosophical manner?!?!  he made us look at the issue in a different perception...he completed his statement saying " Common sense is not common"  It made me think on some common issues where we are concerned on common sense?!?! Irritating horn on a jam packed traffic  Highly noisy sounds of mobile, iPod etc in public transport, Someone laughing on a sad moment or in a death place Annoyingly pessimistic person whom we often have to encounter in everyday life People who comment awkwardly without even understanding the content  Normally our reaction or response to the above situation is to simply say a common word ...dont they have Common sense?? now then What is Common Sense?  If we google it, Wikipedia shows "Common sense is a basic ability to perceive, understand, and judge things which is shared by (

சலாம் "கலாம்" !!!

Image
வல்லரசு இந்தியா இனி உருவா கலாம்  -இதை  ஒவ்வொரு மனதிலும் உரமாக் கலாம் !!! அறிவியல் அறிவினை நாம் வளர்க் கலாம் -  அதனால்  வருங்காலம் நமக்கு புகழ் சேர்க் கலாம்  !!! நேர்மையும் உண்மையும் நெறியாக் கலாம்  - அவர்  போற்றிய கனவை நாம் நன வாக் கலாம் !!! மாமேதையின் ஆசைக்கு வலு சேர்க் கலாம்  - இதுவே  நம்மை உலக சபைதனில் உயர்வாக் கலாம் !!! உழைப்பை உணர்வை ஒன்றாக் கலாம்  - நிம்மதியாய்  உறங்கட்டும் நம் அன்பிற்கினிய - " கலாம்" !!! கண்ணீர் அஞ்சலி சலாம் "கலாம்" !!! - குருஸ்ரீ 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 14-04-2015

Image
  தித்திக்கும் மொழியெனவே எத்திக்கும் மணம் சேர்க்கும்  முத்தமிழே, முது மொழியே, மூவாத உயர் தமிழே, தத்தி வரும் பிள்ளை எந்தன்  மங்காத   புத்தி வழி மன்னவரும் விண்ணவரும் வாழ்த்திடும்  நற் கவிதையினை தா!! நீர் வளமும் நில வளமும் எங்கெங்கும் நிறைந்திடவே- எங்கள்  குலம் பேர் பெறவும் சீர் பெறவும் நல் வழியை தா !! தொழில்  வளமும்   அறிவியலும் வளம்பெறவே- எங்கள்  அறிவினிலே நல்லறமென்னும் அருளினையே தா !!  - குருஸ்ரீ  நிறைவான அறிவுடனே  நித்தமும் நான்  மகிழ வேண்டும் !! குறைவில்லா குணமெனவே  சுற்றம் எனை புகழ வேண்டும் !! இல்லாதோர் இல்வாழ்வில் என்னாலே வளம் சேர வேண்டும் !!  பெற்றவர், உற்றவர்,மற்றவர் அனைவரும் வாழ வேண்டும் !! ஸ்ரீ சபரி மாமலையில் வாழ்கின்ற தெய்வத்தின்  அருள்  எந்நாளும் என்னோடு வேண்டும் !! வேண்டும் !!  - குருஸ்ரீ 

விரல் எழுதும் அழுகை குரல் !!! Jeyakanthan & Nagoor Hanifa demise

Image
நேற்றோடு ஓய்ந்தது ??!!?? தமிழை தமிழால் சிறப்பித்த விரல் !!?? அந்த விரலிளிருந்து எழுத்தாய் வந்தது பாமரனின் குரல் ?!?!?! அது "ஜெயகாந்தன்" எனும் ஓர் எழுத்தாளரின் விரல் !!! நேற்றோடு ஓய்ந்தது ??!!?? தமிழை இசையால் குளிர்வித்த குரல் !!?? தன் குரல் கொண்டு தந்ததெல்லாம் தமிழிசையின் திரள் ?!?!?! அது "ஹனிபா" எனும் ஓர் பாடகரின் குரல் !!! இதுவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு இல்லை  இவர்களைப்போல் நகல் ?! இனி தமிழ் எழுத்துக்கும், தமிழ் இசைக்கும்  உண்டா??? ஓர் பகல்?!?!?! இது தமிழ் மேல் காதல் கொண்ட பாமரனின்  விரல் எழுதும் அழுகை குரல் !!! - குருஸ்ரீ 

ஒவ்வொரு முறையும்!!!! TRY TRY AND TRY AGAIN!!! LIFE IS CRAZY....Thinking in GSri way?!?!

Image
ஒவ்வொரு முறையும், தோல்வியின் வலியில்  வானம் பார்க்கையில் வெண்ணிலா... நாளும் தேய்ந்து வளர்ந்து என்மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது ?!?! ஒவ்வொரு முறையும், அதிர்ஷ்டமில்லாதவன்!! என ஏங்கும் பொழுதில்   செடிகள்... உதிர்வதறிந்தும் தினமும் மலர்ந்து என் கவலை நீக்குகிறது ?!?! ஒவ்வொரு முறையும், இனி என்ன செய்வது? என எண்ணும் நொடியில் கடிகாரம்... ஓயாமல் ஓடி காலத்தை வென்று என் மனம் தேற்றுகிறது ?!?! ஒவ்வொரு முறையும் கேலிக்கு உள்ளாகி வீழ்ந்திடும் நிலையில்  நிலைக்கண்ணாடி... என் பிம்பத்தின் வழியில் உள்ளத்தை உறுதியாக்குகிறது ?!?! ஒவ்வொரு முறையும் மீண்டும் முயலத்தான் போகிறேன் ஏனெனில்  வாழ்க்கை... ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையை தந்துகொண்டிருக்கிறது ?!?! - குருஸ்ரீ 

An Engineer par Brilliance!!! A Writer par Excellence!!! சுஜாதா !!!

Image
It is passionate to think about and to write about a person who I have always wondered and adored... For a not fully grown up kid from a typical town from southern part of India, who was aspiring to be someone who shall be respected for his Knowledge and appreciated for his Actions!!! The best Inspiration would be Rangarajan aka Sujatha He had dreamed million times better, and acted million times sharper!!! Yes I wanted to be an Engineer and Writer, not to be 2nd Sujatha but to be 1st ever Srimanikandan in the globe but not to forget the fact that his footsteps formed an easy pathway for millions like me I definitely know that I have not proved as neither a good engineer nor an writer so far but am sure I WILL DO IT ONE DAY!!! May be prove better than that So with that note I remember one of my most admired inspiration on the day he left for rest.. Sir, You have always been the best and inspired many and you shall be remembered forever Regards G Srimanikandan