Posts

Showing posts from February, 2014

நண்பா!!!

Image
இந்த பதிவு சிறு திருத்தங்களுடன் " நவீன சரஸ்வதி சபதம்" என்ற பெயரில் யோசி மாத இதழின் பிப்ரவரி 2014 பிரதியில் வெளியிடப்பட்டுள்ளது  ஊக்கமளித்த அனைவருக்கும், வாய்ப்பளித்த யோசி ஆசிரியர் கவி. முருகபாரதி அவர்களுக்கும் மிக மிக நன்றி!!! "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்"  என்று விவேகானந்தர் சொன்னார், ஆனால் நான் என்னை பற்றி சொல்வெதென்றால் கவியரசர்  கண்ணதாசனின் பின்வரும் வரிகள் மிகவும் பொருத்தமாகவே இருக்கும், "பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த   பேறு பெரும் இடத்தில இல்லாதவன்  சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு   தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவான்" என்றபோதும் இந்த உலகத்தின் மிக சிறந்த பண்பாளர்களை எனக்கு நண்பர்கள் ஆகும் வாய்ப்பை தருமோ இல்லையோ அறிவும், அன்பும், பண்பும் அதிகம் நிறைந்த மிக உயரிய நண்பர்களின் உலகத்தை என்னிடம் தந்து இருக்கிறது, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், புதுக்கோட்டையின் புழுதி படிந்த தெருக்களில்,கண்கள் முழுவதும் எதிர்கால ஏக்கத்தோடு, எண்ணம்  எல்லாம் எழுச்சியோடு, முடிவில்லா கனவுகளை சுமந்து கொண்டு திரிந்த ஒ

Choice is yours!!!

Image
Luckily I have friends who have got settled almost all part of the globe, they can be easily differentiated into two categories,  One, who loves their hometown, culture, tradition etc, and would abide by them wherever they go...feel pride on the same Other, who would be interested in living in their own way, would love to do whatever they like and of course they have safe card stating that their independence is till the tip of the nose of others!!! Now the former are always keen about their originality but somehow they become more conservative in many ways, in order to be at par with them the latter behaves in a controversial way...You could see in most of the tamilians who got settled in abroad or even in Mumbai, Bangalore saying.... Chennai is worst place to live with hell like traffic, pollution, heat, no one speaks Hindi, no night life etc..........look at our place we have this .............that..........................(most of them would have minimum investment at Chenn

நானும் என் காதலும்....!!!

Image
அதிகாலை ப னி யில் நனைந்திட்ட வெள்ளை ரோஜாக்கள்,   அளவில்லா கேள்விகளால் கரைகளை நுரையாக்கும் அலைகள்,  கிளைகளை நம்பாமல் சிறகுகள் விரித்திடும் சின்னஞ்சிறு பறவை,  விட்டத்து சாரல் சொல்லும் விண்ணின் கண்ணீர் கதைகள்,  உண்மைக்கும் உழைப்புக்கும் உள்ள இடைவெளியில் நிலம் நனைக்கும் பாட்டாளியின் வேர்வை,  தரைதடவும் மரங்களும் தன்மையாய் தென்றலும் தவழ்ந்திடும் தபோவனக்குடில்,  உலகத்தின் வெறுப்புகள் எல்லாம் மறந்திடும் அம்மாவின் மடி, அழகான கவிதை படித்ததும் வழிந்திடும் கண்ணீர் துளி, உச்சி வெய்யிலில்  உள்ளங்கால் எரிகையில் நிழல் தரும் மரம்.... ---- ---- ---- இப்படி இப்படியாய் எத்தனையோ உன்னத உணர்வுகள்  அவளை கண்ட ஆதாம் நொடியில்.... அழகுக்கே தெரியாமல் அழகாய் பிறந்தவள்  உலகுக்கே புரியாத ஓர் உணர்வை தந்தவள் கடவுள் தேடாத புத்தன் கடவுள் ஆனது போல்  காதல் நாடாத பித்தன் கவிஞனானேன்  பல கவிஞர் எழுதிய கவிதைகள் காதலால்  நான் காதல் எழுத வந்தேன் ஓர் கவிதையால்  அவள் மரபு மீறாத புதுக்கவிதை - என்னுள்  விதைத்தால் இயைபு மாறாத தனிக்கவிதை