கலைஞர் - குருவின் எண்ணம், குருஸ்ரீயின் கை வண்ணம் !!!

நினைவுகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்  - குருவின் எண்ணம் குருஸ்ரீயின் கை வண்ணம் !!!

புஞ்சையும் நஞ்சையும் பொய்யாகாத தஞ்சை
மண்ணில் மொழியும் உணர்வும் பின்னி பிணைந்த காலம்
தன்னில், ஊரெல்லாம் ஒன்று கூடி, தெருவெல்லாம்
கோஷம் பாடி,கடல் அலை தோற்கும் வகையில்
கூட்டமோ கூடி நிற்க, கரகர குரலில் கனல் தமிழ் பொங்கி
வர, சிறுவன் நான் சிலிர்த்திடவே !!! உருமிடும் சிங்கம் போல,
உடன்பிறப்பே என்ற ஒரு வார்த்தை கேட்டவுடன் உணர்ச்சி பெருக்கிலன்றோ
சிரக்கம்பம் செய்தார் தொண்டர் !!??!!
நேர்வகுடு கொண்ட தலையோ, நேரிசையாய் நம்மை சேர்க்கும்,
வளர் பிறைபோல் நெற்றி, நிறையசையை நம்மில் ஈர்க்கும்,
கண்ணாடி உள்ளே விழிகள், சிலேடையில் வண்ணம் சேர்க்கும் 
கையிலே சுழன்டிருக்கும் துண்டிலே, எதுகை மோனை இணைந்திருக்கும் 

உள்ளத்து மொழியை மெல்ல உதட்டிலே கோர்த்து, 
வெள்ளத்து நீரைப்போல சரளமாய் சந்தம் வார்த்து,
எண்ணத்தில் என்றும் இனமான உணர்வை சேர்த்து,
வையத்தில் இன்றுவரை தமிழரின் மானம் காத்து,
வெண்ணிற ஆடை உள்ளே மந்திர சொல்லால் அன்று,
தன்னிகரில்லா தமிழால் தரணியை எளிதாய் வென்று,
வாழ்கிறார் அண்ணனின் இதயம் கொண்டு,
உழைக்கிறார் மங்காத கதிரை போன்று !!!
மறக்குமா அந்த காட்சி - நான் மயங்கினேன் தென்றல் சாட்சி !!!
அரசியல் கொள்கையில் அவரை நான் சேரவில்லை, அதனாலென்ன ?!?!
தமிழென்னும் உறவிருக்கு!!!இன்றுவரை  குறையில்லா அவர் மொழியை மனதார போற்றுகின்றேன் !!!

வருடங்கள் பல கடந்து நானோ வயதிலே மூத்த பின்பு - அந்த சிறுவன் என் நினைவில் வந்து 
சிந்தையில் சந்தம் சேர்த்த செந்தமிழ் நாயகன்  பேச்சை கேட்டிடும் எண்ணம் தந்தான்   
கருமமே கண்ணாய் கொண்டு வாழ்ந்திட்ட அண்ணலின் அரங்கம் நோக்கி
தமிழரின் மையமாய் வாழ்ந்திருக்கும் கலைஞரின் உரையை கேட்கும் ஆவலில் அங்கு சென்றேன் !?!?!
கர கர குரலால் அன்று கனலென உருமியவர்  - இன்று தழுதழுத்து பேசுகின்றார் 
முதுமை இல்லா வரமேனும் இருந்திருந்தால் முத்தமிழ் அறிஞர்க்கு தருதல் வேண்டும் !!!   
மூத்தவர் தோற்கலாம் முத்தமிழ் தோற்கலாமா
முதுமை ஓர் கொடுமை அன்றோ ?!?!முத்தமிழ் அறிஞருக்கும் முதுமை உண்டோ?

தழுதழுக்கும் வார்த்தை கேட்டு உள்ளமே அழுதது என்றால் உண்மையே அதுதான் அன்றோ
ஆனாலும் தமிழ் சுவை குறையவில்லை !!!

கோபாலபுரத்தினிலே கோகிலம் சேர்க்கும்
அந்த தீந்தமிழ் அய்யா பேசும் மொழியை கேட்டு
எந்தன் கண்களும் வேர்த்தது, கைகளை சேர்த்தது !!!
வாழ வேண்டும் பல்லாண்டு, தெளிந்த தமிழ் சொல்லாண்டு!!!
இறைவனோ?!!? இயற்கையோ ?!?!அவர் நோயற்ற்ற வாழ்வு வாழ உதவட்டும் ,
அன்னை தமிழ் இன்றும் என்றும் புதுமலராய் மலரட்டும்!!!

- குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!