சலாம் "கலாம்" !!!

வல்லரசு இந்தியா இனி உருவாகலாம் -இதை 
ஒவ்வொரு மனதிலும் உரமாக்கலாம் !!!

அறிவியல் அறிவினை நாம் வளர்க்கலாம் - அதனால் 
வருங்காலம் நமக்கு புகழ் சேர்க்கலாம் !!!

நேர்மையும் உண்மையும் நெறியாக்கலாம் - அவர் 
போற்றிய கனவை நாம் நனவாக்கலாம் !!!

மாமேதையின் ஆசைக்கு வலு சேர்க்கலாம் - இதுவே 
நம்மை உலக சபைதனில் உயர்வாக்கலாம் !!!

உழைப்பை உணர்வை ஒன்றாக்கலாம் - நிம்மதியாய் 
உறங்கட்டும் நம் அன்பிற்கினிய - "கலாம்" !!!


கண்ணீர் அஞ்சலி
சலாம் "கலாம்" !!!
- குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!