மயில் !!!



வான்வெளியில் மேகம் கொஞ்சம்
மோகம் கொண்டு வாடயிலே
மனம் கொள்ளை போகும்
அழகு மயில் தோகை கொண்டு ஆடையிலே

சீராக சேலை கட்டி
சேயிழையாள் நடந்து வந்தால்
வண்ண மயில் பெண்ணொருத்தி வந்தால்
என்றே வார்த்தைகளால் வடிவம் சொன்னார் 
அசைந்தாடும் பூவிடையாள்
அங்கம் வளைந்தாடும் எழிலை கண்டு
தோகை மயில் ஆடுதென்றெ
வகை வகையாய் கவிதை தந்தார்

கண்களிலே களி நடனம் புரியும்
காந்தவகை பெண்ணை எல்லாம்
இன்பமாய் தோகைதனை
அசைந்தாடும் மயில்தான் என்றார் 
நானறிந்த வரையில் பாட்டுக்கு புகழ்
சேர்த்த புலவர் எல்லாம்
களங்கமில்லா பெண்ணழகை
மயிலேன்றே பாடிவைத்தார் 

தோகை கொண்ட மயில் என்றால்  
ஆண் மயில்தான்!!!
அதன் அழகு எல்லாம் மழை மேகம் கண்டு ஆடும் 
ஆண்மையில்தான்!!!

கற்பனைக்கு தர்க்கவியல் தேவை இல்லை
இருந்தபோதும்
ஆண் இனத்தை கௌரவிக்க
ஏன் புலவர் எவரும் விரும்பவில்லை?!?!
எனக்கென்ன நானும் கூட
மயில் போன்ற பெண் மேலே
மையல் கொண்டேன்
 

இருந்தாலும்
அறிவியலின் அடித்தளத்தை மனதில் வைப்பேன்  

எண்ணமும் எழுத்தும் 
- குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!