குருஸ்ரீ - தந்தையர் தினக்கவிதை !!!

ஆறு வருடங்களுக்கு  முன் என் அப்பாவின் பிறந்த நாளுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கையை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை தன் ஒவ்வொரு அசைவுகளிலும் செயல்களிலும் எனக்கு புரிய வைத்ததை எழுதி இருந்தேன், இன்றளவும் ...என்றென்றும் அவை உண்மை என்பதால் இந்த தந்தையர் தினத்திற்காக அக்கவிதையை பதிவிடுகிறேன் ....

அன்புள்ள அப்பாவுக்கு உன்னால் நான் ரசித்தவர்கள் சில இதோ.....,

பௌர்ணமி நிலா,
கார்த்திகை குளிர்,
மார்கழி பனி,
மலையருவி குளியல்,
மலராத ரோஜா,
மல்லிகை வாசம்,
கொட்டும் மழை,
ரயில் பயணம்,
அதிகாலை வானம்,
சூடான தேனீர்,
சுவையான உணவு,
ஓயாத அலை,
ஓவிய சிலை,
சாய்ந்தாடும் மயில்,
சங்கீத குயில்,
சிரிக்கின்ற குழந்தை,
சிவப்பான வானம்,
தூரத்து மேகம்,
கற்பூர வாசம்,
காகித கப்பல்,
மெல்லிய தென்றல்,
புல்வெளி பாதை,
பூப்போன்ற சாதம்,
அம்மாவின் ரசம்,
பூவையர் விழிகள்,
மரத்தடி நிழல்,
மயக்கும் மாலை,
பாரதி பாட்டு,
கம்பன் காவியம்,
கவியரசர் கவிதை,
சுஜாதா கதை,
சுட்டாலும் வெயில்,
சுத்தமான நெய்,
எப்போதும் நான் !!!
என்றாலே நீ !!!.........................

.............................குருஸ்ரீ 

THE GREATEST GIFT I HAVE EVER HAD CAME FROM GOD AND I CALL HIM DAD 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!